புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2014

சண்சீ கப்பலின் மூன்று அகதிகளின் குடியேற்றம் தொடர்பில் கனடாவின் உயர் நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது
ஆட்கடத்தலில் ஈடுபடுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள மூன்று இலங்கையர்கள் தொடர்பான வழக்கினை கனேடிய உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
கனடாவின் உயர் நீதிமன்றம் இதனை அறிவித்திருப்பதாக கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எம்.வி.சண்சீ கப்பல் மூலம் கடந்த 2010ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 13ம் திகதி 489 இலங்கை அகதிகளுடன் கனடா சென்ற கணவன் மனைவி ஆகிய இருவரும், மேலும் ஒரு இலங்கையரும் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் மூவரும் கப்பலில் பணியாற்றி வந்த நிலையில், அவர்கள் ஆட்கடத்தலுக்கு ஒத்துழைத்தாக கூறி, அவர்களை கனடாவிற்குள் அனுமதிக்க முடியாது என்று அந்த நாட்டின் குடிவரவு சபை அறிவித்துள்ளது.
இந்தநிலையில் அவர்களை நாடு கடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கும் பொறுப்பை கனடாவின் உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad