புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2014

மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 227 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 101 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி மற்றும் ‘சி ஓட்டர்’ அமைப்பு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.அதிமுக 27 தி  முக 5-6 பாஜ கூ 4 .6
‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி மற்றும் ‘சி ஓட்டர்’ அமைப்பு சார்பில் பாராளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

இதில் எந்த கூட்டணிக்கும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பலம் கிடைக்காது என்று தெரிய வந்துள்ளது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 227 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 101 இடங்களும் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.
அதே நேரத்தில், இடது சாரிகள் மற்றும் மாநிலங்களில் செல்வாக்கு மிக்க பிராந்திய கட்சிகள் 208 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், புதிய கட்சியான ஆம் ஆத்மிக்கு 7 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. மொத்தம் 543 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் ஆட்சி அமைப்பதற்கு 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றுகிறது. மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு 27 இடங்களும், தி.மு.க.வுக்கு 5 இடங்களும், தே.மு.தி.க.வுக்கு இரு இடங்களும், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடங்களும் கிடைக்கும் என்றும், அந்த கருத்துக்கணிப்பு முடிவு கூறுகிறது.
அதேபோல் மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தாபானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தனது முதன்மை இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அந்த மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு 24 இடங்களும், இடதுசாரி கட்சிகளுக்கு 14 இடங்களும், காங்கிரசுக்கு இரு இடங்களும், பா.ஜனதாவுக்கு ஒரு இடமும் இதர கட்சிகளுக்கு ஒரு இடமும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்ட உள்ளது.
80 தொகுதிகளைக் கொண்ட நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்குப்பிறகு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் வெற்றி பெற இருப்பது தெரிய வந்துள்ளது.
பா.ஜனதா கட்சிக்கு 34 இடங்களும், மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ் கட்சிக்கு 21 இடங்களும், முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சிக்கு 20 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்களும், ராஷ்டிரீய லோக்தளத்துக்கு ஒரு இடமும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad