துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் உலக தர வரிசையில் முதல் இடம் வகிக்கும் நோவக் ஜோகோவிக் கனடா
நாட்டின் வாசெக் பொஸ்பிசிலை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் முதல் சுற்றில் தோற்கடித்து 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
கடந்த மூன்று தினங்களாக காற்று, மேகம் மற்றும் மணற்புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த துபாயில் வெப்பமான பருவநிலை திரும்பியதை அடுத்து நடந்த இந்த போட்டியில் விறுவிறுப்பு காணப்பட்டது.
பெக்கர் பயிற்சி
இன்றைய போட்டி ஒரு மணிநேரம் மற்றும் 18 நிமிடங்கள் வரை நீடித்தது. கடந்த டிசம்பர் 2013ம் ஆண்டில் இருந்து ஜெர்மனி நாட்டு டென்னிஸ் வீரர் போரீஸ் பெக்கரின் பயிற்சியின் கீழ் விளையாடி வருகின்ற ஜோகோவிக், பெக்கர் வைத்திருக்கும் சாதனைகளில் ஒன்றான 50 பட்டங்களை வெல்வது என்ற இலக்கினை நோக்கி செல்கிறார்.
9வது வருடம்
செர்பிய நாட்டின் 27 வயது வீரரான ஜோகோவிக், துபாயில் 9வது வருடமாக விளையாடி வருகிறார். கடந்த வருடம் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் துபாய் பட்டத்தை வென்றிருந்தார். இந்த வருடம் துபாய் பட்டத்தை ஜோகோவிக் வென்றால் அது அரபு நாட்டில் அவரது 5வது பட்டமாகும்.
உலக தர வரிசையில் இரண்டாம் இடம் வகிக்கும் பெடரர் நேற்று நடந்த போட்டியில் ரஷ்ய நாட்டின் மிக்காயில் யூஸ்னியை முதல் சுற்றில் 6-3, 6-1 என்ற செட் கணக்கில வீழ்த்தினார். துபாயில் 7வது முறையாக பட்டத்தை வெல்வதற்குரிய முனைப்புடன் பெடரர் விளையாடி வருகிறார்.