முதல் நாளிலேயே தெலங்கானா மற்றும் ஆந்திராவில் 30 கோடி ரூபாய் அளவிற்கும், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 15 கோடி ரூபாய் அளவிற்கும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் 15 கோடி ரூபாய் அளவிற்கும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் வசூல் இன்னும் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மன்னர்களின் வாழ்க்கையை சினிமாவாக்கும் கலை, ஹாலிவுட் கலைஞர்களுக்கு மட்டும்தான் கைவரும் என்று இருந்ததை, இயக்குனர் ராஜமௌலி உடைத்து தென்னிந்திய சினிமா வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.

உலகப் புகழ் பெற்ற டென் கமாண்ட்மென்ட்ஸ், லாரன்ஸ் ஆப் அரேபியா, க்ளாடியேட்டர், அவதார் என பிரம்மாண்டத்துக்கும், கலை வார்ப்புக்கும் ஹாலிவுட் படங்களையே இந்தியர்கள் உதாரணம் காட்டி வந்த காலம் மலையேறிவிட்டது என்றுதான் கூறவேண்டும்.
அதிலும் தெலுங்கு, தமிழ் மொழிகளில் நேரடியாக 'பாகுபலி' திரைப்படம் வெளிவந்திருப்பது இரண்டு மாநில திரை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் மலையாளம்,ஹிந்தி மொழிகளிலும் 'பாகுபலி' வெளிவந்திருப்பது கூடுதல் வரவேற்பைப் பெற்றுள்ளது.
'பாகுபலி'யில் கதாநாயகனாக பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா,சத்யராஜ்,நாசர், ராணா, கோபிசந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இசை மரகதமணி, ஒளிப்பதிவு செந்தில்குமார். மற்றும் பல தொழில் நுட்பக்கலைஞர்கள் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி 'பாகுபலி' யை உருவாக்கியிருக்கிறார்கள்.