12 ஜூலை, 2015

இப்தார் நோன்பு..சோனியா அ.தி.மு.க.வுக்கு அழைப்பு , காட்சி மாறுகிறதா _தி மு க அதிர்ச்சி

இப்தார் நோன்பு விருந்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா அ.தி.மு.க.வுக்கும் அழைப்பிதழை அனுப்பியதால் திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21ம் திகதி தொடங்குகிறது.
இந்த கூட்டத் தொடரில் லலித் மோடி விவகாரம், வியாபம் முறைகேடு உள்ளிட்டவற்றை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை நெருக்கடிக்குள்ளாக்கும் என தெரிகிறது.
இந்த கூட்டத் தொடருக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளை ஓன்றிணைக்க காங்கிரஸ் மும்முரம் காட்டி வருகிறது.
இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டில் நாளை மறுநாள் நடக்கும் இப்தார் விருந்தில் பங்கேற்க பா.ஜ.கவைத் தவிர பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸுடன் கை கோர்க்க திமுக தயார் என்று மு.க.ஸ்டாலின் பேசிவந்த நிலையில், தி.மு.க.வுக்கு சோனியா அழைப்பு விடுத்திருக்கிறார்.
அதே நேரத்தில் தற்போது அதிமுகவுக்கும் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளதால், இந்த விருந்தில் அதிமுக பிரதிநிதி ஒருவர் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
ஆனால் அதிமுகவை அழைத்த விவகாரம் திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.