12 ஜூலை, 2015

வித்தியாவுக்கு நேர்ந்த கொடுமையைக்கூட மறந்து மூளைச்சலவை செய்யப்பட்டவித்தியாவின் குடும்பம் பணத்துக்காக குத்துக்கரணம்

புலம்பெயர் புங்குடுதீவு அமைப்புகள் வித்தியாவின் குடும்பத்துக்கு பொருளாதார உதவிக்கு உறுதி கொடுக்கும் பட்சத்தில் தீர்வு கிடைக்கும் 
புங்குடுதீவின் இளம்பிஞ்சு வித்தியாவுக்கு  ஏற்பட்ட அநீதிக்காக முழு இலங்கையும் , புலம்பெயர் உறவுகளும் நீதி கேட்டு போராடியது.
இத்தகைய புலர் பெயர் அமைப்புக்களினதும் வித்தியாவினது தாய் சகோதரங்களின் வேண்டுகோளையும் ஏற்று தனது சொந்த ஊரான புங்குடுதீவில் நிகழ்ந்த கொடுமைக்காக எவ்வித பலனையும் பாராது இந்த வழக்கில் வாதாட சிரேஸ்ட சட்டத்தரணியான தவராசா  முன்வந்தது மிகப் பெரிய வரப்பிரசாதமாக தமிழர்கள் மத்தியில் பேசப்பட்டது.
 அத்துடன் சந்தேக நபர் ஒருவர் தப்பிச் செல்ல காரணமான விடயங்களை விசாரணை செய்யுமாறு நீதிமன்றத்தில் விண்ணப்பித்ததையடுத்து பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 வித்தியாவின் தாயாருக்கும் சகோதர்களுக்கும் சிறந்த மூளைச்சலவை செய்யப்பட்டு பணத்தாசை ஊட்டபட்டு அவர்களின் மனங்களை மாற செய்துள்ள அரசியலும் வியாபாரமும் கலந்த  ஒரு அணி வெற்றி கண்டுள்ளது . குற்றவாளிகளில் சுவிஸ் குமாரும் இடம்பெற்றயுப்பதனால் பணம் தாராளமாக புழங்கும் வழி  இருப்பதால் இந்த அணுகுமுறை கச்சிதமாக முடிவு கண்டுள்ளது .
 1. குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதால் உங்களுக்கு எதுவுமே  லாபம் கிடைக்கப் போவதில்லை.ஆதலால் உங்கள் எதிர்கால  வசதியான வாழ்வுக்கு உதவும் வகையில் பெருமளவிலான பொருளாதார வளத்தினை ஏற்படுத்தி தருகிறோம் .
2. இந்த அணுகுமுறைக்கு  நீங்கள் ஒத்துவரா விட்டால் குற்றவாளிகள் தண்டனை பெறும் பட்சத்தில்  உங்கள் உயிருக்கான ஆபத்து எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும் .அந்த ஆபத்தான எந்த நிமிடமும்  பயபீதியில் வாழும் வாழ்க்கை தேவையா என்ற கேள்வி ஒரு புறம் 

 இந்த இரண்டு ஆயுதங்களையும் பயன்படுத்தியே வித்தியா குடும்பத்தை இந்த வலையில் சிக்கவைததுள்ளர்கள் .வழக்கின் விசாரணையில் பல  உப கதைகளும் பின்னணிகளும் பல்வேறு  குற்றங்கள் அரசியல்வாதிகளின்தொடர்புகள் எல்லாம் வெளிச்சத்துக்கு வரும் என்பதானாலும்  இந்த அணி இவ்வளவு அக்கறை காட்டுவதாக எமது நிருபர் அறிவிக்கிறார் . வித்தியாவின் மரணத்தை வியாபாராமாக்கி மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதியும் ஊரில் பெரிய மனிதர்களாய் வேசம் போடும் சில வியாபாரிகளும் சேர்ந்து செய்த விசமனத்தனமான செயல்பாடுகளினால் வித்தியாவின் தாய், சகோதரங்கள் மீது இந்த வியாபாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களின் காரணமாகவும் வித்தியாவின் வழக்கில் இதுவரை வாதாடிய அவர் அந்த வழக்கில் தொடர்ந்தும் வாதாடுவதிலிருந்து விலகிக் கொண்டதாக அறியக் கிடைக்கின்றது.
இந்த துரதிஸ்டவசமான சம்பவத்தினால் வித்தியா விடயத்தில் கரிசனை கொண்ட புலம்பெயர் தமிழர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உட்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக வித்தியாவின் வழக்கில் இனி நீதி கிடைக்குமா என்ற சந்தேகமும் தமிழ் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.
சட்டத்தரணி தவராசா அவர்கள் இந்த வழக்கின் பின்னணியில் மறைந்துள்ள பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர மேற்கொண்ட பல முயற்சிகளை முறியடிக்கவே இத்தகையை சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக நம்பத்தகுந்ந வட்டாரங்கள் மூலம் தகவல் கசிந்துள்ளது. 
இறுதியாக ஒரு தகவல் .வித்தியாவின் குடும்பம் மீண்டும் தவராசாவிடம் சென்று  தொடர்ந்து வழக்கில் வாதாடும் படி கேட்டுக்கொண்டதாக அறிகிறோம்