ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செரினா வில்லியம்ஸ் 20வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீராங்கனை முகுருஜாவை சந்தித்தார். ஒரு மணி நேரம் 23 நிமிடம் நீடித்த இந்த போட்டியில் செரினா 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். விம்பிள்டன் பட்டத்தை செரினா கைப்பற்றுவது இது 6வது முறை ஆகும்.
தற்போது செரினா வென்றுள்ள 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும். முதலிடத்தில் உள்ள ஸ்டெபி கிராபின் சாதனையை முறியடிக்க இன்னும் 2 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை செரினா வெல்ல வேண்டும்.
தற்போது செரினா வென்றுள்ள 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும். முதலிடத்தில் உள்ள ஸ்டெபி கிராபின் சாதனையை முறியடிக்க இன்னும் 2 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை செரினா வெல்ல வேண்டும்.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை ரஷ்யாவின் மக்ரோவா-எலினா வென்னிசா ஜோடியை எதிர்கொண்டது. இதில் 5-7,6-7 (4), 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டம் வென்றது. விம்பிள்டன் போட்டியில் இந்திய வீராங்கனை ஒருவர் பட்டம் வெல்வது இதுவே முதல் முறை.
கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை பொறுத்த வரை கடந்த 2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் மகேஷ் பூபதியுடன் இணைந்து சானியா மிர்சா கலப்பு இரட்டையரில் பட்டம் வென்றிருந்தார். அதே போல் கடந்த கடந்த 2011ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையரில் இறுதி ஆட்டம் வரை முன்னேறி தோல்வியடைந்தார்.