12 ஜூலை, 2015

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணி எனும் புதிய கூட்டணி சற்றுமுன்னர் கைச்சாத்து

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணியை தோற்கடிக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி எனும் புதிய
கூட்டணி சற்றுமுன்னர் உத்தியோக பூர்வமாக கைச்சாத்திட்டுள்ளது.
 
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்ரமசிங்கவும், ஜாதிக ஹெல உறுமய சார்பில் சம்பிக்க ரணவக்கவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் ராஜித சேனாரட்னவும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் சற்று முன்னர் கையொப்பமிட்டுள்ளனர்.