12 ஜூலை, 2015

காந்திய மக்கள் இயக்கம் போட்டியிட உள்ள தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் விவரம்


2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாகவும், முதல் கட்டமாக 18 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலையும் காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் தமிழருவிமணியன் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தபோது வெளியிட்டார்.

இரா.கதிரேசன் - நாகர் கோவில் 
மு.ஆகாஷ்தேவ் - குளச்சல்
நா.ரங்கநாதன் - ஸ்ரீவைகுண்டம்
சு.ஈஸ்வரன் - மதுரை மேற்கு
சி. உமாராணி - திண்டுக்கல்
அ.அரு ளானந்த் - காரைக்குடி
சி.கருப்பையன் - துறையூர் (தனி)
ச.லாரன்ஸ் - லால்குடி
டென்னில் கோவில் பிள்ளை - கோவை வடக்கு
அ.சு.கிருஷ்ணமூர்த்தி - திருப்பூர் வடக்கு
வள்ளி ரமேஷ் - குன்னூர்
ந.சுப்பிரமணியன் - உதகமண்டலம்
ப.பெரியசாமி ஈரோடு வடக்கு
நா.ரகுபதி - தருமபுரி
வே.பாண்டிகுமார் - ஓசூர்
மு.பாண்டு - செங்கம் (தனி)
தர்ம.தினகரன் - காஞ்சிபுரம்
முகமது உசேன் - சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி.

30 வேட்பாளர்களை களத்தில் நிறுத்த தீர்மானித்துள்ளோம். முதல் கட்டமாக 18 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளோம். இடதுசாரி கட்சிகள் திராவிட கட்சிகளை புறக்கணித்து மக்களின் பிரச்சினைகளை முன்னெடுத்து செல்கிறார்கள். ஆகையால் நாங்கள் போட்டியிடும் தொகுதிகளை தவிர்த்து மீதம் உள்ள தொகுதிகளில் இடதுசாரி கட்சிகளுக்கு எங்கள் ஆதரவு உண்டு என தமிழருவிமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.