முன்னைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகளுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதில்கூற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அஜித் நிவாட் கப்ரால் தமது பதவியை ராஜினாமா செய்த நிலையிலேயே சில்வாவின் குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.