புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2024

பலத்தைக் காட்டவே பொதுவேட்பாளருக்கு ஆதரவு!

www.pungudutivuswiss.com


தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகுக்குக் காட்டுவதுதான் எங்களது விருப்பம் எனவும் அதனால் தான் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை நாங்கள் ஆதரிக்கின்றோம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகுக்குக் காட்டுவதுதான் எங்களது விருப்பம் எனவும் அதனால் தான் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை நாங்கள் ஆதரிக்கின்றோம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்

நண்பியின் துரோகத்தால் உயிரை மாய்த்த பெண்!

www.pungudutivuswiss.com


தனது நண்பிக்காக வங்கியில் இருந்து கடனாக பெற்று கொடுத்த பணத்தினை மீள செலுத்த முடியாதமையால் மனமுடைந்த குடும்ப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். 
யாழ்ப்பாணம் , அல்வாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் .

தனது நண்பிக்காக வங்கியில் இருந்து கடனாக பெற்று கொடுத்த பணத்தினை மீள செலுத்த முடியாதமையால் மனமுடைந்த குடும்ப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் , அல்வாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் .

பாடசாலை நேரத்தில் தனியார் கல்வி நிறுவனத்தில் கற்பித்த ஆசிரியர் இடைநீக்கம்!

www.pungudutivuswiss.com


உயர்தர மாணவர்களுக்கு  கணிதம் கற்பித்த ஆசிரியர் ஒருவர், இடைநீக்கம் செய்யப்பட்டார். பாடசாலைக்கு சமுகமளிக்காது,  உயர்தர வகுப்பு மாணவர் குழுவிற்கு பணத்துக்காக பிரத்தியேக வகுப்பை நடத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே அந்த ஆசிரியரை இடைநீக்கம் செய்துள்ளதாக வடமத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர்   எஸ்.எம்.டபிள்யூ. சமரக்கோன் தெரிவித்தார்.

உயர்தர மாணவர்களுக்கு கணிதம் கற்பித்த ஆசிரியர் ஒருவர், இடைநீக்கம் செய்யப்பட்டார். பாடசாலைக்கு சமுகமளிக்காது, உயர்தர வகுப்பு மாணவர் குழுவிற்கு பணத்துக்காக பிரத்தியேக வகுப்பை நடத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே அந்த ஆசிரியரை இடைநீக்கம் செய்துள்ளதாக வடமத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரக்கோன் தெரிவித்தார்

17 ஜூலை, 2024

வகுப்பெடுக்கப் போன விரிவுரையாளர் குளியல் காட்சியை வீடியோ எடுத்து மாட்டினார்!

www.pungudutivuswiss.com

வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் ஆங்கில வகுப்பு நடத்தும் வீடொன்றில், யுவதி ஒருவர் குளித்துக்கொண்டிருக்கும் போது அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் ஆங்கில வகுப்பு நடத்தும் வீடொன்றில், யுவதி ஒருவர் குளித்துக்கொண்டிருக்கும் போது அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

அவரே பதில் வைத்திய அத்தியட்சகர் என்கிறார் சுகாதார அமைச்சர்!

www.pungudutivuswiss.com


சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்தார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்தா

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்- மீண்டும் குழப்பம்!

www.pungudutivuswiss.com
ரம்- மீண்டும் குழப்பம்!
[Wednesday 2024-07-17 17:00]

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பை சில மணிநேரங்களுக்கு பிற்போட்டுள்ள நிலையில், வைத்தியர் அர்ச்சுனாவை வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்ற கோரி மீண்டும் நீதிமன்றத்தை  நாடவுள்ளனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பை சில மணிநேரங்களுக்கு பிற்போட்டுள்ள நிலையில், வைத்தியர் அர்ச்சுனாவை வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்ற கோரி மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளனர்

இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி விலகினார்

www.pungudutivuswiss.com

பிரான்சில் அவசர அவசரமாக உருவான புதிய கூட்டணி!

www.pungudutivuswiss.com

பிரான்சில் வலதுசாரிக் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக, இடதுசாரிக்கட்சிகள் இணைந்து அவசர அவசரமாக இடதுசாரிக் கூட்டணி ஒன்றை அமைத்தன. ஆனால், இதுவரை யாரும் ஆட்சி அமைக்கவில்லை! பிரான்சில் வலதுசாரிக் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக, இடதுசாரிக்கட்சிகள் இணைந்து அவசர அவசரமாக உருவாக்கிய கூட்டணி The New Popular Front (NPF).

பிரான்சில் வலதுசாரிக் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக, இடதுசாரிக்கட்சிகள் இணைந்து அவசர அவசரமாக இடதுசாரிக் கூட்டணி ஒன்றை அமைத்தன. ஆனால், இதுவரை யாரும் ஆட்சி அமைக்கவில்லை! பிரான்சில் வலதுசாரிக் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக, இடதுசாரிக்கட்சிகள் இணைந்து அவசர அவசரமாக உருவாக்கிய கூட்டணி The New Popular Front (NPF).

கால்வாயை கடந்து பிரித்தானியா வந்த 300 புலம்பெயர்ந்தோர்

www.pungudutivuswiss.com

பிரித்தானிய எல்லைப்படையினரால் கால்வாயைக் கடந்து வந்த 300 புலம்பெயர்ந்தோர் டோவர் துறைமுகத்தில் சேர்ந்தனர். பிரித்தானியாவிற்கு சமீபத்திய மாதங்களில் வரும் புலம்பெயர்ந்தோர், அதிகாரிகளைத் தவிர்ப்பதற்காக ஆபத்தான பாதைகளை எடுத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரண்டு படகுகளில் வந்த 127 பேர், 21 மைல் பயணத்தை கடந்தனர். அதேபோல் மறுநாள் 41 பேர் ஒரு படகில் வந்தனர்.

பிரித்தானிய எல்லைப்படையினரால் கால்வாயைக் கடந்து வந்த 300 புலம்பெயர்ந்தோர் டோவர் துறைமுகத்தில் சேர்ந்தனர். பிரித்தானியாவிற்கு சமீபத்திய மாதங்களில் வரும் புலம்பெயர்ந்தோர், அதிகாரிகளைத் தவிர்ப்பதற்காக ஆபத்தான பாதைகளை எடுத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரண்டு படகுகளில் வந்த 127 பேர், 21 மைல் பயணத்தை கடந்தனர். அதேபோல் மறுநாள் 41 பேர் ஒரு படகில் வந்தனர்

20 ஜூன், 2024

ஜனாதிபதியின் நிலைப்பாடு ஆபத்தானது!

www.pungudutivuswiss.com


தேர்தலை ஒத்திவைத்து பதவிக்காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாக கூறப்படும் நிலையில், பாலியல் சமத்துவம் தொடர்பான சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாமை எதிர்காலத்தில் ஆபத்தானதாக மாறலாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தேர்தலை ஒத்திவைத்து பதவிக்காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாக கூறப்படும் நிலையில், பாலியல் சமத்துவம் தொடர்பான சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாமை எதிர்காலத்தில் ஆபத்தானதாக மாறலாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஆனைக்கோட்டையில் இன்று முதல் அகழ்வாய்வு!

www.pungudutivuswiss.com


பெருங்கற்காலப் பண்பாட்டை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கக் கூடிய வகையிலான சான்றுகள் கிடைக்கப் பெறும் என நம்பப்படும் ஆனைக் கோட்டையில், இன்று அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பெருங்கற்காலப் பண்பாட்டை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கக் கூடிய வகையிலான சான்றுகள் கிடைக்கப் பெறும் என நம்பப்படும் ஆனைக் கோட்டையில், இன்று அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன

மைத்திரிக்கு மீண்டும் தடை

www.pungudutivuswiss.com


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது

சுதந்திரக் கட்சியின் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா தெரிவு!

www.pungudutivuswiss.com


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நிமல் சிறிபால டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தெரிவு இடம்பெற்றது. இதற்கு முன்னர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்பட்டார். ​மேலும் இந்தக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நிமல் சிறிபால டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தெரிவு இடம்பெற்றது. இதற்கு முன்னர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்பட்டார். ​மேலும் இந்தக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

22ஆம் திகதி வரை வடமாகாணத்தில் கனமழைக்கு வாய்ப்பு

www.pungudutivuswiss.com


எதிர்வரும் 22ஆம் திகதி வரை வடமாகாணத்தில் கனமழையுடனான காலநிலை நிலவும் என்று வானிலையாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் மூத்த விரிவுரையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 22ஆம் திகதி வரை வடமாகாணத்தில் கனமழையுடனான காலநிலை நிலவும் என்று வானிலையாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் மூத்த விரிவுரையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு முழுக்குப் போடத் தயாராகிறார் மஹிந்த

www.pungudutivuswiss.com
பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  அரசியலுக்கு விடைகொடுக்கத் தயாராவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியலுக்கு விடைகொடுக்கத் தயாராவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

நீதி, பொறுப்புக்கூறலை ஆதரிக்கிறது கன்சர்வேட்டிவ் கட்சி! - டேவிட் கமரூன்

www.pungudutivuswiss.com


பிரித்தானிய தமிழர்களிற்கான கன்சவேர்ட்டிவ் கட்சியின் அர்ப்பணிப்பு மிகவும் உறுதியானது தளர்ச்சியற்றது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய தமிழர்களிற்கான கன்சவேர்ட்டிவ் கட்சியின் அர்ப்பணிப்பு மிகவும் உறுதியானது தளர்ச்சியற்றது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

19 ஜூன், 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் அப்படியே பாமகவுக்கு மடை மாறுமா?

www.pungudutivuswiss.com
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விக்ரவாண்டி சட்டப்பேரவைத்
தொகுதிக்குட்பட்ட பகுதியில் தி.மு.க. கூட்டணிக்கு அடுத்து நெருக்கமான

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 30 கோடி

www.pungudutivuswiss.com
ஜனாதிபதி தேர்தல் அண்மித்துவரும் சூழலில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கு தலா 30 கோடி ரூபாய் வழங்கியே தமிழ் மக்களை

ஜனாதிபதியின் சூழ்ச்சியை முறியடித்து விட்டது அரசியலமைப்பு பேரவை!

www.pungudutivuswiss.com


சட்டமா அதிபர் சஞ்ஜய் ராஜரத்தினத்தை பிரதம நீதியரசராக நியமித்து தனக்கு ஏற்றாற் போல் சட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க மேற்கொண்ட அரசியல் சூழ்ச்சியை அரசியலமைப்பு பேரவை தோற்கடித்து விட்டதாக தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார்.

சட்டமா அதிபர் சஞ்ஜய் ராஜரத்தினத்தை பிரதம நீதியரசராக நியமித்து தனக்கு ஏற்றாற் போல் சட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க மேற்கொண்ட அரசியல் சூழ்ச்சியை அரசியலமைப்பு பேரவை தோற்கடித்து விட்டதாக தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார்

அரசை விட்டு வெளியேறுமாறு விஜயதாசவுக்கு ஜனாதிபதி அழுத்தம்!

www.pungudutivuswiss.com

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசுக்கு ஆதரவான எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு இலஞ்சம்

www.pungudutivuswiss.com


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் எதிர்க்கட்சியினருக்கு மாத்திரம் வழங்குவதானது இலஞ்சம் வழங்குவதற்கு சமமானது என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் எதிர்க்கட்சியினருக்கு மாத்திரம் வழங்குவதானது இலஞ்சம் வழங்குவதற்கு சமமானது என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்

நாளை மாலை தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கிறார் ஜெய்சங்கர்

www.pungudutivuswiss.com


 நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.

நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்

நீதிமன்றத் தீர்ப்புக்கு சவால் விடுவது தவறான முன்னுதாரணம்!

www.pungudutivuswiss.com


நீதிமன்றத் தீர்ப்புக்கு சவால் விடும் வகையில் ஜனாதிபதி கருத்து வெளியிடுவது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் உரை தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டு உரையாற்றும் போதே ரதன தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்புக்கு சவால் விடும் வகையில் ஜனாதிபதி கருத்து வெளியிடுவது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் உரை தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டு உரையாற்றும் போதே ரதன தேரர் இவ்வாறு கூறியுள்ளார்

நீதிமன்றத்திற்கே சவால் விடுகிறார் ஜனாதிபதி

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி தந்திரமான முறையில் நீதிமன்றத்திற்கே சவால் விடும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் என்ற குற்றஞ்சாட்டிய விமல் வீரவன்ச, உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கே சவால் விட முடியுமென்றால் அவ்வாறான உயர்நீதிமன்றம் இருப்பதில் பலனில்லை என்றும், அவற்றை மூடிவிடலாம் என்றார்.

ஜனாதிபதி தந்திரமான முறையில் நீதிமன்றத்திற்கே சவால் விடும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் என்ற குற்றஞ்சாட்டிய விமல் வீரவன்ச, உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கே சவால் விட முடியுமென்றால் அவ்வாறான உயர்நீதிமன்றம் இருப்பதில் பலனில்லை என்றும், அவற்றை மூடிவிடலாம் என்றார்

உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்க முடியாது - ஜனாதிபதி ரணில் அறிவிப்பு.

www.pungudutivuswiss.com


பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையலாம் என்பதால் இந்தச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது. எனவே அது குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையலாம் என்பதால் இந்தச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது. எனவே அது குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

18 ஜூன், 2024

சம்பந்தனைச் சந்திக்கிறார் ஜெய்சங்கர்

www.pungudutivuswiss.com


இந்திய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள எஸ்.ஜெய்சங்கர், தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகின்றார்.
இந்த விஜயத்தின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனுடனும் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.
இந்தத் தகவலை சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள எஸ்.ஜெய்சங்கர், தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகின்றார். இந்த விஜயத்தின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனுடனும் அவர் பேச்சு நடத்தவுள்ளார். இந்தத் தகவலை சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்

திருமண பந்தத்தில் இணைந்த தர்ஜினிக்கு குவியும் வாழ்த்து!

www.pungudutivuswiss.com


உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனை  எனும் பெருமையை பெற்ற இலங்கையை சேர்ந்த  தமிழரான தர்ஜினி சிவலிங்கம்  திருமண பந்தத்தில் இணைந்துள்ள  நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனை எனும் பெருமையை பெற்ற இலங்கையை சேர்ந்த தமிழரான தர்ஜினி சிவலிங்கம் திருமண பந்தத்தில் இணைந்துள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

17 ஜூன், 2024

துட்டகைமுனு சிங்கள மன்னன் இல்லை - அவன் வாழ்ந்த காலத்தில் சிங்கள மொழியே இல்லை

www.pungudutivuswiss.com


மரபணு பரிசோதனைகளின் மூலம் சிங்களவர்கள் தென்னிந்திய திராவிடர்களின் வழித்தோன்றல்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மரபணு பரிசோதனைகளின் மூலம் சிங்களவர்கள் தென்னிந்திய திராவிடர்களின் வழித்தோன்றல்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு கைது!

www.pungudutivuswiss.com



12 மற்றும் 13 வயதுகளையுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அப் பிரதேசத்தைச் சேர்ந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தனமல்வில பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

12 மற்றும் 13 வயதுகளையுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அப் பிரதேசத்தைச் சேர்ந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தனமல்வில பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது

தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்க கிளிநொச்சி மாவட்ட அமைப்புக்கள் ஆதரவு

www.pungudutivuswiss.com



எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான தமது ஆதரவை கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புக்களும் வழங்குவதாக உறுதியளித்துள்ளன.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான தமது ஆதரவை கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புக்களும் வழங்குவதாக உறுதியளித்துள்ளன.

சுவிட்சர்லாந்தயுக்ரேன் அமைதி மாநாட்டின் முன்மொழிவில் கையெழுத்திடாத இந்தியா - என்ன நடந்தது

www.pungudutivuswiss.com
ஜெலென்ஸ்கி உச்சிமாநாட்டின் முன்மொழிவுகளை ரஷ்யாவிடம்
முன்வைக்க விரும்புகிறார்

வழக்கை முடிவுறுத்துவதற்கு தமிழ் அரசுக் கட்சி மத்திய குழுவில் தீர்மானம்

www.pungudutivuswiss.com

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

16 ஜூன், 2024

மாத்தறை கூட்டத்தின் பின்னரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணில் அறிவிப்பார்! [

www.pungudutivuswiss.com



ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து தற்போதைய அரசால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதற்காக விசேட மக்கள் சந்திப்புகளை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதலாவது கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகளை அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்னெடுக்கவுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து தற்போதைய அரசால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதற்காக விசேட மக்கள் சந்திப்புகளை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதலாவது கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகளை அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்னெடுக்கவுள்ளார்.

அடுத்த வருடம் முதல் வீடுகளுக்குப் புதிய வரி- ஐஎம்எவ் அறிவுறுத்தல்!

www.pungudutivuswiss.com


இலங்கையில் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, 2025 ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வாடகை வீடு மற்றும் வெறுமையாக குடியிருப்பு சொத்துக்களுக்கு வாடகை வருமான வரி ஒன்றை அறிமுகப்படுத்த சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது.

இலங்கையில் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, 2025 ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வாடகை வீடு மற்றும் வெறுமையாக குடியிருப்பு சொத்துக்களுக்கு வாடகை வருமான வரி ஒன்றை அறிமுகப்படுத்த சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது.

14 ஜூன், 2024

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் இருந்து விழுந்து மகள் பலி

www.pungudutivuswiss.com



தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது

13 ஜூன், 2024

காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினைக்காக குரல் கொடுப்போம்!- என்கிறது சஜித் அணி.

www.pungudutivuswiss.com



யுத்தம் நடந்த பிரதேசத்தில் காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கபடவில்லை. அதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

யுத்தம் நடந்த பிரதேசத்தில் காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கபடவில்லை. அதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

அடுத்த சில வாரங்களில் 15 முக்கியமான சட்டங்களை நிறைவேற்ற அரசாங்கம் திட்டம்!

www.pungudutivuswiss.com


எதிர்வரும் சில வாரங்களில் சுமார் 15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

எதிர்வரும் சில வாரங்களில் சுமார் 15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்

புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டு - முன்னாள் சுங்க அதிகாரி விடுதலை!

www.pungudutivuswiss.com


விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு உதவியதாக தெரிவித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த முன்னாள் சுங்க அதிகாரி கந்தையா யோகநாதன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு உதவியதாக தெரிவித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த முன்னாள் சுங்க அதிகாரி கந்தையா யோகநாதன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் - புலனாய்வு அமைப்புகளின் செயற்பாடு குறித்து ஆராய விசாரணைக்குழு நியமனம்!

www.pungudutivuswiss.com



2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை (SIS),தேசிய புலனாய்வு பிரதானி (CNI) மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.என்.டி.அல்விஸ் தலைமையிலான குழுவொன்று நியமித்துள்ளார்.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை (SIS),தேசிய புலனாய்வு பிரதானி (CNI) மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.என்.டி.அல்விஸ் தலைமையிலான குழுவொன்று நியமித்துள்ளார்

சித்தார்த்தனுடன் தொடர்ந்து சந்திப்புகளை நடத்த ஜேவிபி முடிவு

www.pungudutivuswiss.com

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்கவுக்கும் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் சித்தார்த்தன் எம்.பியின் கந்தரோடை இல்லத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்கவுக்கும் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் சித்தார்த்தன் எம்.பியின் கந்தரோடை இல்லத்தில் இடம்பெற்றது

4 ஜூன், 2024

15 அமைப்புகள், 210 பேரின் சொத்துக்கள், நிதிகளை முடக்கியது அரசாங்கம்!

www.pungudutivuswiss.com


இலங்கை அரசாங்கம் 15 தீவிரவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ண வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் 15 தீவிரவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ண வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

காஸா சமாதான திட்டத்திற்கு சுவிஸ் அரசு ஆதரவு

www.pungudutivuswiss.comகாஸா சமாதான திட்டத்திற்கு சுவிஸ் அரசு ஆதரவு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முன்வைத்துள்ள காஸா சமாதான திட்டத்திற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஆதரவினை வெளியிட்டுள்ளது.

காஸாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவது மற்றும் பணயக் கைதிகளை விடுதலை செய்தல் ஆகியன தொடர்பில் பைடன் யோசனைத் திட்டமொன்றை முன்மொழிந்துள்ளார்.

மூன்று கட்டங்களாக சமாதான உடன்படிக்கை அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சமாதான முனைப்புக்களுக்கு ஆதரவளிக்கப்பட உள்ளதாக சுவிட்சர்லாந்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

31 மே, 2024

கட்டலோனியா பிரிவினைவாதிகளுக்கான பொது மன்னிப்பு: ஸ்பெயின் நாடாளுமன்றம் ஒப்புதல்!!

www.pungudutivuswiss.com
2017 ஆம் ஆண்டு சட்டவிரோதமான மற்றும் தோல்வியுற்ற

மீள நிகழாமையை உறுதிப்படுத்த உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்பட வேண்டும்!

www.pungudutivuswiss.com


இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மிகமோசமான வன்முறைகள் மற்றும் மீறல்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு உண்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படுவதும், பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதும் இன்றியமையாததாகும் என ' போர் தவிர்ப்பு வலயம் ' ஆவணப்படத்தின் இயங்குநர் கல்லம் மக்ரே வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மிகமோசமான வன்முறைகள் மற்றும் மீறல்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு உண்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படுவதும், பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதும் இன்றியமையாததாகும் என ' போர் தவிர்ப்பு வலயம் ' ஆவணப்படத்தின் இயங்குநர் கல்லம் மக்ரே வலியுறுத்தியுள்ளார்.

ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் அல்லது பதவியை நீடிக்க வேண்டும்! - ஐதேக புது நிபந்தனை.

www.pungudutivuswiss.com


நாட்டை அபிவிருத்தி செய்து கொண்டு முன்னெடுத்துச்செல்ல ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் அல்லது தேர்தலை ஒத்திவைத்து இன்னும் சிறிது காலம் ரணில் விக்ரமசிங்கவுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். இந்த  இரண்டு தீர்வுகளைத் தவிர வேறு எந்த முடிவு எடுத்தாலும் நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாமல் போகும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

நாட்டை அபிவிருத்தி செய்து கொண்டு முன்னெடுத்துச்செல்ல ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் அல்லது தேர்தலை ஒத்திவைத்து இன்னும் சிறிது காலம் ரணில் விக்ரமசிங்கவுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். இந்த இரண்டு தீர்வுகளைத் தவிர வேறு எந்த முடிவு எடுத்தாலும் நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாமல் போகும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

இலங்கையர்கள் தாய்லாந்தில் விசா இன்றி நுழையலாம்!

www.pungudutivuswiss.com


இலங்கை உட்பட  36 நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்துக்குள் நுழைய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள்  60 நாட்கள் வரையில் அங்கு தங்கியிருக்கலாமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை உட்பட 36 நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்துக்குள் நுழைய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 60 நாட்கள் வரையில் அங்கு தங்கியிருக்கலாமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்

30 மே, 2024

இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகள் என்ற பேச்சுக்களுக்கே இடமளித்தல் கூடாது!

www.pungudutivuswiss.com


பொதுவேட்பாளர் குறிப்பிட்ட சில தரப்பினரின் அரசியல் நலன்களை பிரதிபலிப்பவராக விளங்க கூடாது- அவர் தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அடையாளப்படுத்தும் வகையில் கிழக்கிலிருந்து வேட்பாளர் தேர்வு நடைபெற வேண்டும். அவ்வேட்பாளர் பெண்ணொருவாராக இருப்பின் உத்தமம்.எனவும் தெரிவித்துள்ளது

பொதுவேட்பாளர் குறிப்பிட்ட சில தரப்பினரின் அரசியல் நலன்களை பிரதிபலிப்பவராக விளங்க கூடாது- அவர் தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அடையாளப்படுத்தும் வகையில் கிழக்கிலிருந்து வேட்பாளர் தேர்வு நடைபெற வேண்டும். அவ்வேட்பாளர் பெண்ணொருவாராக இருப்பின் உத்தமம்.எனவும் தெரிவித்துள்ளது

கிளிநொச்சியில் ஐஸ் வியாபாரி வீட்டில் பதுங்கியிருந்த உப பொலிஸ் பரிசோதகர் கைது!

www.pungudutivuswiss.com


கிளிநொச்சியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டினுள் இருந்த உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டினுள் இருந்த உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஜெனீவாவின் பிரேரணையால் சிக்கலில் இலங்கை இராணுவம் : அச்சம் வெளியிட்டுள்ள பாதுகாப்புத் துறை

www.pungudutivuswiss.com

28 மே, 2024

சாவகச்சேரியில் விபத்து - 4பேர் காயம்!

www.pungudutivuswiss.com

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் ஏ9 வீதியில் கனரகவாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் ஏ9 வீதியில் கனரகவாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பாதணியில் கார்த்திகைப் பூ -தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்!

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி, பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை இரண்டு வருடங்களால் நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின்  பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவினால்  யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது

மல்லாகம் யாழ்ப்பாணத்தில் மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்

www.pungudutivuswiss.com

24 மே, 2024

கனடாவில் இன்று முதல் அமுலுக்கு வரும் சட்டம்!

www.pungudutivuswiss.com

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக உருத்திரகுமாரன் மீண்டும் தேர்வு

www.pungudutivuswiss.com


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக விசுவநாதன் உருத்திரகுமாரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக்காலத்தின் முதலாவது அமர்வு கடந்த மே 17,18,19 ஆகிய மூன்று நாட்களில் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. இதன்போது அரசாங்கத்தின் பிரதிநிதிகள் நேரடியாகவும் இணையம் மூலமாகவும் பங்கேற்றிருந்தனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக விசுவநாதன் உருத்திரகுமாரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக்காலத்தின் முதலாவது அமர்வு கடந்த மே 17,18,19 ஆகிய மூன்று நாட்களில் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. இதன்போது அரசாங்கத்தின் பிரதிநிதிகள் நேரடியாகவும் இணையம் மூலமாகவும் பங்கேற்றிருந்தனர்.

கடற்கொந்தளிப்பினால் நெடுந்தீவு படகுச் சேவை ரத்து!

www.pungudutivuswiss.com



கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்ற காரணத்தால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குறிகாட்டுவான் - நெடுந்தீவு கடற்போக்குவரத்து இன்று 24 ஆம் திகதி இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்ற காரணத்தால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குறிகாட்டுவான் - நெடுந்தீவு கடற்போக்குவரத்து இன்று 24 ஆம் திகதி இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவின் போக்குவரத்து 'ஒற்றைக் கட்டணத்' திட்டத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்!

www.pungudutivuswiss.com



ஒன்ராறியோ அரசு மாநில  பொதுப்போக்குவரத்துக் கட்டமைப்பில் 'ஒற்றைக் கட்டண' ஒருவழிப் பயணத் திட்டத்தை பெப்ரவரி 26ஆம் திகதியன்று அறிமுகப்படுத்தியது.

ஒன்ராறியோ அரசு மாநில பொதுப்போக்குவரத்துக் கட்டமைப்பில் 'ஒற்றைக் கட்டண' ஒருவழிப் பயணத் திட்டத்தை பெப்ரவரி 26ஆம் திகதியன்று அறிமுகப்படுத்தியது

ருஹுணு குமாரி மோதியதில் 3 இளைஞர்கள் பலி

www.pungudutivuswiss.com



கிந்தோட்டை பிந்தலியா ரயில்வே கடவையில் நேற்று இடம்பெற்ற  விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிந்தோட்டை பிந்தலியா ரயில்வே கடவையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இலங்கையின் காரீயச் சுரங்கங்களை குறிவைக்கும் இந்தியா

www.pungudutivuswiss.com



இலங்கையில் உள்ள  காரீய சுரங்கங்களை இந்தியா கையகப்படுத்த முயற்சித்து வருகிறது.  காரீயத்துக்கான தேவை உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நிலையிலேயே, இந்தியா குறித்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் உள்ள காரீய சுரங்கங்களை இந்தியா கையகப்படுத்த முயற்சித்து வருகிறது. காரீயத்துக்கான தேவை உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நிலையிலேயே, இந்தியா குறித்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பொறுப்புக்கூறலுக்கான ஆணையை ஐ.நா மனிதஉரிமை பேரவை புதுப்பிக்க வேண்டும்!

www.pungudutivuswiss.com



இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது கொல்லப்பட்டவர்கள் காணாமல்போனவர்களை நினைவுகூர்ந்தவர்களை இலங்கை அதிகாரிகள் அச்சுறுத்தினர் தடுத்து வைத்தனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது கொல்லப்பட்டவர்கள் காணாமல்போனவர்களை நினைவுகூர்ந்தவர்களை இலங்கை அதிகாரிகள் அச்சுறுத்தினர் தடுத்து வைத்தனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது

ad

ad