புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2024

மல்லாகம் யாழ்ப்பாணத்தில் மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் 10 வயதான பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து , பெற்றோர் ஆசிரியருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , ஆசிரியரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து ,ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை குறித்த ஆசிரியரினால் , மேலும் சில மாணவிகளும் துஷ்பிரயோகத்திற்கு பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ad

ad