வெள்ளி, டிசம்பர் 20, 2013

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்த முயன்ற சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டார்
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வழங்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவில் சிறைவாசம் இருந்து வந்த சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
51 வயதான பாலாஜி நாயுடு என்பவரே அமெரிக்க டலாஸ் சிறையில் இருந்து சிங்கப்பூரூக்கு நாடு கடத்தப்பட்டார்.
மேரிலேன்ட் பகுதியில் இருந்து சுமார் 900,000 டொலர் பெறுமதியான ஆயுதங்களை இலங்கையின் விடுதலைப்புலிகளுக்கு கடத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2010 ஆம் ஆண்டு நாயுடு குற்றவாளியாக காணப்பட்டு 5 வருட சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்தநிலையிலேயே அவர் நேற்று முன்தினம் புதன்கிழமை சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்