12 மார்., 2013


மட்டக்களப்பு, செங்கலடியில் 36 வயது குடும்பஸ்தர் ஒருவர் ஒன்றரை வயது குழந்தையுடன் தனது மனைவி பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவிற்குச் செல்வதை தடுப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஐயங்கேணியைச் சேர்ந்த ஜோசப் கிங்ஸ்லி அன்டனி என்ற இந்நபர் தேசிய மனித உரிமை ஆணைக்குழு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பிரதேச
செயலகம் மற்றும் ஏஹாவூர் பொலிஸ் உட்பட உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்து தனது குழந்தையின் நலன்கருதி மனைவியின் பயணத்தை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.