12 மார்., 2013

மனித உரிமை காரணிகளுக்காக இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நடாத்தக் கூடாது என்று பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் அமர்வுகள் நடாத்தப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை வகிக்கும் நாடுகளுக்கே பிரித்தானிய அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டுமென அவர்
தெரிவித்துள்ளார். இலங்கை மீது சர்வதேச சமூகம் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பிலான சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை இலங்கை தொடர்ந்தும் உதாசீனம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்