12 மார்., 2013

செக் மோசடி வழக்கு: இயக்குனர் கஸ்தூரிராஜா கோர்ட்டில் ஆஜர்
சினிமா இயக்குனர் கஸ்தூரிராஜா சென்னையைச் சேர்ந்த பைனான்சியர் 'போத்ரா' என்பவரிடம் ரூ. 65 லட்சம் கடன் பெற்று இருந்தார். கடனை திருப்பி செலுத்தும் வகையில் 2
காசோலை கொடுத்து இருந்தார். அதில் 40 லட்சம் மதிப்புள்ள ஒரு காசோலை அவரது கணக்கில் பணம் இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டது. 

இதைத் தொடர்ந்து ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட்டு கோர்ட் டில் போத்ரா செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜராகும்படி கஸ்தூரி ராஜாவுக்கு 8-வது மாஜிஸ்திரேட்டு விஜயராணி உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து இன்று காலை கஸ்தூரிராஜா கோர்ட்டில் ஆஜரானார். 

வழக்கு விசாரணையை வருகிற 15-ந்தேதிக்கு ஒத்திவைத்த மாஜிஸ்திரேட்டு அன்று விசாரணைக்காக கஸ்தூரி ராஜா ஆஜராகும்படி உத்தரவிட்டார்.