12 மார்., 2013புதிய கட்சி தொடங்குகிறார் சரத் பொன்சேகா
 
இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா,  புதிதாக அரசியல் கட்சி தொடங்க இருக்கிறார்.  இதற்காக தேர்தல் துறையினரிடம் தேவையான ஆவணங்களை இன்று பொன்சேகா சமர்ப்பித்தார்.  மேலும், வலிமையான எதிர்க்கட்சியை உருவாக்குவதற்கு முன் வந்துள்ள அவர், எந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் தனது கட்சியில் வந்து சேரலாம் என்றும் இலங்கையின் ஜனநாயக தேசிய கூட்டணியின் எம்.பி. ஜெயந்த கெட்டகோடா கட்சியின் பொது செயலாளராக செயல்படுவார் என்றும் பொன்சேகா அறிவித்தார். 
கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சேவுக்கு எதிராக ஜனநாயக தேசிய கூட்டணியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.