12 மார்., 2013


தனியார் வகுப்பிற்குச் சென்றுவிட்டு தமது வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்த நான்கு மாணவிகள் முச்சக்கர வண்டியில் சென்ற மூன்று பேரால் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் பலாங்கொடை பிரதேசத்திற்குட்பட்ட பெட்டிகல எனும் இடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதில் 10 வயதிற்கும் 11 வயதிற்குமிடைப்பட்ட பாடசாலை மாணவிகளே பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நான்கு மாணவிகளும் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரையும் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சர் பொலிஸாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.