12 மார்., 2013


காதலியான பேராசிரியரை கடத்திய மாணவன்: நாகர்கோவில் அருகே பரபரப்பு
நாகர்கோவிலில் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியரை மாணவர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்‌கோவிலை அடுத்த இரைச்சல்குளம் பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இங்கு இப்பகுதியைச்சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர் கவுதம் (20), என்பவருக்கும், கல்லூரி பேராசிரியையாக , கருங்கல்லைச் சேர்ந்த ஜாஸ்மின்சுஜி(24) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களாக காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் பல இடங்களில் ஊர் சுற்றியுள்ளனர். இவர்களின் காதலுக்கு பேராசிரியை பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 8-ம் தேதி இருவரும் வீட்டை விட்டு ஓடினர். எனினும் பெற்றோர் ‌தேடியதால் மீண்டும் வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை, மாணவன் கவுதம், சக மாணவர்களுடன் டாடா சுமோ காரில் கருங்கல் வந்தார்.அங்கு பேராசிரியை ஜாஸ்மின் சுஜி வீட்டிற்கு சென்று, அவர்களது பெற்றோரை அரிவாளால் வெட்டிவிட்டு ஜாஸ்மின் மேரியை கடத்திச்சென்றார். படுகாயமடைந்த பெற்றோர் கருங்கல் போலீசில் புகார் கூறியுள்ளனர்.