12 மார்., 2013


கருணாநிதியுடன் கோபமாக இருக்கும் குஷ்பு விரைவில் காங்கிரசிஸ் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
ஐதராபாத்தில் சிரஞ்சீவியை சந்தித்து அவர் பேசி உள்ளதாகவும், மார்ச் 15ம் திகதிக்குப் பின்னர் அவர் காங்கிரசிஸ் சேர வாய்ப்புள்ளது என்றும் தமிழகத்தின் பிரபல
ஊடகமொன்றில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார் என்ற ஊடகமொன்றின் கேள்விக்கு ஊடகமொன்றில் குஷ்பு பதிலளித்தார். இதனால் கடுப்பான திமுக வினர் கல்வீசி குஷ்புவுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அதற்கு குஷ்பு டுவிட்டரில் பதில் கொடுத்தார் குஷ்பு.
குஷ்பு இன்னொரு மணியம்மை என்று கருணாநிதி குஷ்பு அடங்கிய புகைப்படத்துடன் அடுத்த செய்தி வெளியானது. எப்போது தன்னைப்பற்றிய விமர்சனங்களுக்கு ஒரு எல்லைக்கு மேல் ரியாக்ஷன் காட்டாதவர் குஷ்பு. ஆனால் இந்த விடயத்தில் கட்டுக்கடங்காத கோபத்தால் வார்த்தைகளை அள்ளிவிட்டார். சுருங்கக் கூறின் டுவிட்டரில் ஒரு போரையே நடத்திவிட்டார் அம்மணி.
போதாததங்கு நக்கீரனில் பேட்டிவேறு. இப்போது குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் பின்னணி இதுதான்…
திருச்சியில் குஷ்பு மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் கருணாநிதி பலமுறை தொடர்ப்பு கொண்டும் குஷ்பு பேசவில்லையாம். தன்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் பின்னர்தான் பேசுவேன் என்று கண்டிப்பாக இருக்கிறாராம் குஷ்பு.
ஆனால் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் ஒப்புக்கொள்ள மறுக்கிறாராம். இதற்கு பேராசிரியர் ஆதரவும் இருப்பதால் கருணாநிதியால் எதுவும் செய்ய முடியவில்லை.
கருணாநிதியுடன் பேச மறுக்கும் குஷ்பு வரும் 15ம் திகதிக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நான் ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் கெடு விதித்து இருக்கிறாராம். ஆனால் என்ன செய்ய கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தவிக்கிறாராம் கருணாநிதி.
குஷ்பு ஐதராபாத்தில் இருந்தபோது மத்திய அமைச்சரும் நடிகருமான சிரஞ்சீவியை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது தனக்கு திமுகவில் ஏற்பட்ட அவமானம் பற்றிச் சொல்லியுள்ளார் குஷ்பு. அப்போது சிரஞ்சீவி அவரை காங்கிரஸ் கட்சியில் சேருமாறு அழைப்பு விடுத்தாராம்.
உடனே குஷ்பு என் தந்தை கூட காங்கிரஸ் கட்சிதான். வழக்குகள் முடிந்த உடன் காங்கிரஸ் கட்சியில் சேரலாம் என்று நினைத்தேன். அப்போது ஆட்சியில் இருந்த சிலர் தன்னை கட்டாயப்படுத்தி திமுகவில் சேர்த்து விட்டனர். இதற்கு மேலும் என்னால் அந்தக் கட்சியில் தொடரமுடியாது. கட்சித்தலைவர் கருணாநிதி மீது எனக்கு அன்பு உண்டு.
என்னைத் தாக்கியவர்கள் மீது வரும் 15ம் திகதிக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறேன். அப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் காங்கிரஸ் கட்சியில் சேருவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று சொல்லியிருக்கிறார் குஷ்பு.