புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

நோக்கியாநிறுவனத்துக்கு தமிழக அரசு நோட்டீஸ்


சென்னை அருகே உள்ள  ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா நிறுவனம் உள்ளது. இந்த  ஆலையில் தயாரிக்கப்பட்ட நோக்கியா செல்போன்கள் ஏற்றுமதி செய்வதாக கூறி இந்தியாவுக்குள் விற்பனை செய்யப்பட்டதாக வணிக வரித் துறை தெரிவித்துள்ளது. மேலும், ஏற்றுமதிக்கு மட்டுமே விற்பனை
வரி பொருந்தாது என்ற நிலையில், உள்நாட்டு விற்பனையில் ஈடுபட்டதற்காக விற்பனை வரியாக 2 ஆயிரத்து 400 கோடி செலுத்த வேண்டும் என அது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையடுத்து  சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் ஒன்றை தாக்கல் செய்துள்ள நொக்கியா நிறுவனம், செல்ஃபோன்கள் ஏற்றுமதிக்கான சுங்கத் துறை அனுமதி உள்ளிட்ட எல்லா ஆவணங்களும் இருப்பதாகவும், தமிழக அரசின் நோட்டீஸ் ஏற்கத்தக்கதல்ல என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, மத்திய அரசின் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் வரிவிதிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நோக்கியா நிறுவனம் வழக்கை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

ad

ad