புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

பா.ஜனதா - காங்கிரஸ் வேட்பாளர்களில் 30% பேர் கிரிமினல் வழக்கு பின்னணி கொண்டவர்கள்!'
புதுடெல்லி: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள பா.ஜனதா - காங்கிரஸ் வேட்பாளர்களில் 30 சதவீதம் பேர் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள்
என்று தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக தேசிய தேர்தல் கண்காணிப்பகம் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம் நடத்திய சர்வே-யில் இது தெரியவந்துள்ளது.பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இதுவரை 469 வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதில் மாதிரிக்கு 280 வேட்பாளர்களின் வேட்பு மனுக்களுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தை எடுத்து ஆய்வு செய்ததில், 30 சதவீதம் பேர் கிரிமினல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்பவர்கள் எனத் தெரியவந்துள்ளது. அதிலும் 13 சதவீதம் பேர் மீது கொலை, கடத்தல் உள்ளிட்ட மிகவும் கடுமையான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. 

கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட 35 சதவீத பா.ஜனதா வேட்பாளர்களில் 17 சதவீதம் பேர் மீது மிகவும் கடுமையான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அதேப்போன்று கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட 27 சதவீத காங்கிரஸ் வேட்பாளர்களில் 10 சதவீதம் பேர் மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. 

நாட்டின் தலைநகரான டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள சந்த் டோமர் மற்றும் பா.ஜனதா சார்பில் நிறுத்தப்பட்டுள்ள சதீஷ் துபே ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளன. 

கர்நாடக பா.ஜனதாவில் நிறுத்தப்பட்டுள்ள எடியூரப்பா மீது சட்டவிரோத கனிம சுரங்க ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அதேப்போன்று சண்டிகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் பவன் பன்சால், தனது மருமகன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர். 

இவ்வாறு கிரிமினல் குற்றச்சாட்டு பின்னணி கொண்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளது குறித்து கேட்டபோது, இருகட்சிகளுமே அதில் தவறில்லை என்றே கூறுகின்றன. 

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சல்மாம் சாஷ் கூறுகையில், சட்டவிதிகளின்படி குற்றவாளி என அறிவிக்கப்படாதவரை ஒருவர் அப்பாவிதான் என்று கூறினார். 

அதேப்போன்று பா.ஜனதா செய்தி தொடர்பாளர் மீனாஷி லெகி கூறுகையில்,"குற்றச்சாட்டு எனக் கூறப்படும் வரிகளுக்கு இடையே உள்ளவற்றை நீங்கள் படிக்க வேண்டும். அனைத்து குற்றச்சாட்டுக்களுமே உண்மையாகிவிடாது" என்றார். 

இதனிடையே சர்வேக்கு மாதிரிக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட 280 வேட்பாளர்களில் ஏறக்குறைய 60 சதவீதம் பேர் ரு.1 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை கொண்டவர்கள். 

இந்த சர்வே-யில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பிராந்திய கட்சிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

ad

ad