புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

இளைஞர், யுவதிகளை மைதானமொன்றில் தடுத்து வைத்துள்ள இராணுவம்: யாழ்.வட்டுக்கோட்டையில் பதற்றம்
யாழ். வட்டுக்கோட்டையில் பொதுமக்களைச் சுற்றி வளைத்துள்ள இராணுவத்தினர், அங்குள்ள இளைஞர் யுவதிகளை அழைத்து விளையாட்டு மைதானமொன்றில் தடுத்து வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட்டுக் கோட்டையின் மாவடி, முளாய், சங்கரத்தை, பொன்னாலை உள்ளிட்ட பல பிரதேசங்களில் நேற்றிரவு முதல் இராணுவத்தினர் சூழ்ந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் அப்பகுதியிலிருந்து வெளியே செல்வதற்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பெரும் அச்சத்துடன் இருந்த அந்த மக்களுக்கு திடீரென இராணுவத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டு, இந்தப் பிரதேசத்திலிருந்து யாரும் வெளியே செல்லக் கூடாதென்றும், அதே போன்று யாரும் உள்ளே வரக்கூடாதென்றும் இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
இதன் பின்னர் அந்தப் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானமொன்றில் அனைவரையும் ஒன்றுகூடுமாறு அறிவித்த இராணுவத்தினர், குறிப்பாக வீட்டிலிருக்கின்ற இளைஞர் யுவதிகள் அனைவரும் வரவேண்டுமென்றும் கோரியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் அச்சமும் நிலவுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வட்டுக்கோட்டை பயணம்
யாழ். வட்டுக்கோட்டைப் பகுதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை தொடர்பில் நேரடியாக அறிவதற்காக வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையிலான குழுவினர் வட்டுக்கோட்டைப் பகுதிக்கு பயணம் செய்து சம்பவம் தொடர்பில் விசாரித்துள்ளனர்.
நேற்று இரவு முதல் வட்டுக்கோட்டைப் பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இளைஞர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டு அரசடி இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் நடனேந்திரன் (கஜன்) ஆகியோர் வட்டுக்கோட்டைப் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள் கிராம அலுவலரைச் சந்தித்த போது, கைதான இளைஞர்கள் தமது பகுதியினைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று கிராம அலுவலர் தெரிவித்திருக்கின்றனர்.
இதன் தொடராக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு சென்ற அமைச்சர் தலைமையிலான குழுவினர், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை சந்தித்து கலந்துரையாடியிருக்கின்றனர்.
இவ்வாறான குழப்பமான செயற்பாடுகளை ஏன் முன்னெடுக்கின்றீர்கள்? இது தொடர்பாக மக்கள் மத்தியில் அச்சமான நிலை காணப்படுகின்றது என்று பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
இதற்கு பதிலளித்த பொலிஸ் பொறுப்பதிகாரி, தர்மபுரத்தில் நடைபெற்ற அசம்பாவிதத்துடன் தொடர்புடைய நபர்கள் வட்டுக்கோட்டைப் பகுதியில் இருப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்தே சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும், கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ad

ad