புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் தமிழ் மாணவர்கள்
கிழக்குப் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த அனைத்து முதலாமாண்டு தமிழ் மாணவர்களும் வெளியேறி தமது வீடுகளுக்குச் சென்று விட்டாதாக மாணவர் யூனியன் அறிவித்துள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாக தமிழ் பேசும் மாணவர்கள் அடுத்த இரு வாரங்களுக்கு வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்ததை அடுத்தே இம் மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிலிருந்து வெளியேறியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்து முதலாம் வருட தமிழ் மாணவர்கள் வெளியேறத் தொடங்கி விட்டனர்.

வெளி மாகாணங்களிலிருந்தும், மாவட்டங்களிலுமிருந்தும் வந்து கிழக்குப் பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்து கற்கைகளில் ஈடுபட்டு வந்த மாணவர்களே இவ்வாறு வெளியேறியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து சனிக்கிழமை அதிகாலை வரை மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மலையகம், கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களுக்குச் செல்லும் பஸ்கள் மாணவர்களால் நிரம்பி வழிந்ததைக் காண முடிந்தது.

சிரேஷ்ட பெரும்பான்மை சமூக மாணவர்களால் தம்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கோரிக்கைகளை முன்வைத்தும் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்புப் போராட்டத்தின் பின்னர் கிழக்குப் பல்கலைக்கழக  உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜாவுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்தையில் உரிய பதில் எட்டப்பட்டாமையினாலேயே தமிழ் மொழிமூல மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்ததோடு பல்கலைக்கழக விடுதியிலிருந்து முதலாமாண்டு மாணவர்கள் வெளியேறவும் நேரிட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

ad

ad