புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

கூட்டணி வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டதால் துரைமுருகன் ஆதரவாளர்கள் 11 பேர் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டுள்ளனர்.
கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு
தி.மு.க. கூட்டணியில் வேலூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் முன்னாள்
அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணி கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டதால், இதற்கு வேலூர் தி.மு.க.வில் எதிர்ப்பு இருந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை அமைதிப்படுத்தும் வகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிக்கை ஒன்று வெளியிட்டார். அதில் வேலூர் உள்பட சில தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதன் காரணத்தை அதில் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த நிலையில் வேலூர் தி.மு.க. நிர்வாகிகள் சிலரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி பொதுச்செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–
நீக்கம்
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், வேலூர் மாவட்டம், வேலூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு எதிராகவும், தி.மு.க. தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிற வகையிலும், கட்சிக்கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதாக தலைமைக்கு தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, கே.வி.குப்பம் ஒன்றிய செயலாளர் தயாளமூர்த்தி, கே.வி.குப்பம் ஒன்றிய துணை செயலாளர் எம்.சிவக்குமார், தாராபடவேடு நகரப்பொருளாளர் டயர் கண்ணன் (எ) விவேகானந்தன், காட்பாடி ஒன்றியம், வஜ்சூர் ஒன்றிய பிரதிநிதி பி.சுரேஷ்பாபு, காட்பாடி ஜி.பாபு, குடியாத்தம் ஒன்றிய துணை செயலாளர் மீனூர் ஜெயவேலு, குடியாத்தம் ஒன்றிய துணைச்செயலாளர் குருநாதன், குடியாத்தம் ஒன்றிய பொருளாளர் ரா.அண்ணாதுரை, குடியாத்தம் நகர இலக்கிய அணி பொருளாளர் பூமாலை. வாசு, பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, குடியாத்தம் ஒன்றியத்தைச் சேர்ந்த ரஞ்சித் ஆகியோர் தி.மு.க. உறுப்பினர் பொறுப்பு உள்பட தி.மு.க.வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
துரைமுருகன் ஆதரவாளர்கள்
தற்காலிகமாக நீக்கப்பட்ட தி.மு.க.வினர் அனைவரும் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad