புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

கூட்டடணி முடிச்சு போட்ட மச்சானும் மகனும் 
''நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. கூட்டணியில் விஜயகாந்த், ராமதாஸ், வைகோ ஆகிய மூவரும் இடம்பெறுவார்கள் என்பதை 18.12.13 தேதியிட்ட ஜூ.வி. இதழில் சொல்லியிருந்தேன். அதுதான் அச்சரம் பிசகாமல் நடந்துள்ளது. விஜயகாந்த்துக்கு 14, பி.ஜே.பி., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா எட்டு தொகுதிகள் என்று சொல்லியிருந்தேன். இதில் ம.தி.மு.க-வுக்கு மட்டும் ஒரு தொகுதி குறைந்துள்ளது. 

. விஜயகாந்த் தி.மு.க. அணிக்கு போய்விடுவார் என்றோ, அ.தி.மு.க. அணிக்கு பி.ஜே.பி. போய்விடும் என்றோ குழப்பமான செய்திகள
''17-ம் தேதி திங்கள்கிழமை இரவு வரையிலான நிலவரத்தை நான் உமக்கு கடந்த இதழில் சொன்னேன். பி.ஜே.பி. கூட்டணியில் பா.ம.க. இல்லை என்பதே அன்றைய நிலவரம். 17-ம் தேதி இரவு பத்து மணிக்கு மேல், அன்புமணி தான் அதிகமாக உடைந்து போய்விட்டார். 'இந்தக் கூட்டணியை எப்படியாவது உருவாக்கிவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், முடியாமல் போய்விட்டது. இது பா.ம.க-வின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல’ என்று அன்புமணி சொல்லிக்கொண்டாராம். அவரது நண்பர்கள் சிலரும் அவரிடம் இதுபற்றி பேசியிருக்கிறார்கள். 'பா.ம.க. இதுவரை வாங்கி வைத்திருக்கும் நெகட்டிவ் இமேஜை துடைத்துவிட்டு, பரவலான பொது அரசியலுக்குள் வருவதற்கான சரியான நேரம் இதுதான். பி.ஜே.பி. கூட்டணிக்குள் போய் இதுவரை வாங்கிவைத்துள்ள தவறான இமேஜை உடைத்துக்கொள்ளுங்கள். உங்கள் அப்பா காலம் வேறு. இனிவரும் காலம் வேறு. சாதியை வைத்துக்கொண்டு இனி அரசியல் செய்ய முடியாது. அதுவும் உங்களைப் போன்றவர்களால் நிச்சயம் முடியாது. முடிந்த அளவு நல்ல தொகுதிகளாக வாங்கிக்கொண்டு செட்டில் ஆகிவிடுங்க’ என்று அந்த நண்பர்கள் அன்புமணியிடம் சொல்லியிருக்கிறார்கள். இதுவும் அவரது மனமாற்றத்துக்குக் காரணம்! ஆனால்..?''
''பி.ஜே.பி. கூட்டணிக்கான முயற்சியை அன்புமணி செய்துவரும்போதெல்லாம் அவருக்குத் தடங்கலாக இருந்தது ராமதாஸும் காடுவெட்டி குருவும்தான். இருவரையும் அன்புமணியால் சமாதானம் செய்ய முடியவில்லை. கூட்டணியில் சேரக் கூடாது என்பதற்காகவே தொகுதிகளை மாற்றி மாற்றிக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் அன்புமணி நினைத்தார். 18-ம் தேதி காலையில் ஜி.கே.மணியை அழைத்து அன்புமணி பேசியிருக்கிறார். அன்புமணி வீட்டில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. 'பி.ஜே.பி. கூட்டணி வேண்டாம். சமூக ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரால் சாதிக்கட்சிகளோடு அணி சேரலாம்’ என்று சொல்லிவந்த ஜி.கே.மணி, கடந்த இரண்டு வாரங்களாகத்தான் தனது நிலைப்பாட்டை மாற்றிக்​கொண்டிருந்தார். எனவேதான், ஜி.கே.மணியை அழைத்துப் பேசினார். ராமதாஸுக்கும் அன்பு​மணிக்குமான சமீபகால மீடியேட்டரே ஜி.கே.மணிதான். அவர்கள் இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். 'மொத்தப் பிரச்னையும் பா.ம.க-வுக்கும் தே.மு.தி.க-​வுக்கும்தான். இடைப்பட்ட பி.ஜே.பி-யை வைத்துக்​​கொண்டு பேசுவதைவிட, நேரடியாக தே.மு.தி.க-விடம் பேசலாம்’ என்று இருவரும் முடிவெடுத்​தார்களாம்!''
''ராமதாஸ் அப்போது தர்மபுரி கூட்டத்தை முடித்துக்​கொண்டு திங்கள்கிழமை தைலா​புரம் வந்தவர், செவ்வாய்க்கிழமை வேலூர் வந்துவிட்டார். அன்று மாலையில் வேலூரில் அவசர செயற்​குழுவை ராமதாஸ் கூட்ட இருப்பதாகத் தகவல் பரவியது. செயற்குழு கூட்டி, பி.ஜே.பி-யுடன் கூட்டணி இல்லை என்று ராமதாஸ் அறிவித்துவிடுவார் என்று பயந்துபோனார் அன்புமணி. இந்தத் தகவல் பரவியபோது, 'செயற்குழு எதுவும் கூடவில்லை’ என்று இந்தத் தரப்பால் விளக்கம் சொல்லப்பட்டது. இப்படி ஒரு மனநிலையில் ராமதாஸ் இருக்கும்போதுதான், தே.மு.தி.க-விடம் பேசுவதற்​கான முயற்சியில் அன்பு​மணி இறங்கினார்!''

''அன்புமணிக்கு அவரது அம்மா ஆதரவும் பூரணமாக இருக்கிறது. அதனால்தான் அவர் இதில் இறங்கினார். விஜயகாந்த்திடம் பேச முடியாது; பேசினாலும் அவர் எப்படி ரெஸ்பான்ஸ் செய்வார் எனத் தெரியாது என்பதால், சுதீஷிடம் பேசலாம் என்று முடிவெடுத்துள்ளனர். சுதீஷ் அலைபேசி எண்ணை வாங்கி, அன்புமணியே பேசியிருக்கிறார். இருவரும் மிக நெருக்கமான நண்பர்களைப்​போலத்தான் பேசியிருக்கிறார்கள். 'இந்தக் கூட்டணியில் இருப்பதில் எங்களுக்குப் பரிபூரண திருப்திதான். ஆனால், எங்களுக்கு சேலமும் திருவண்ணாமலையும் இருந்தால் நல்லது என்று நினைக்கிறோம்’ என்றுஅன்புமணி சொல்லியிருக்கிறார். 'கேப்டனிடம் பேசிவிட்டுச் செல்கிறேன்’ என்று பொறுப்பாகப் பதில் சொல்லியிருக்கிறார் சுதீஷ். இது 18-ம் தேதி காலையில் நடந்துள்ளது. சுதீஷை எப்படிப் பிடிப்பது என்பதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி பா.ம.க. வேட்பாளர் அனந்தராமன் செய்து​கொடுத்ததாகச் சொல்கிறார்கள்!''

''சுதீஷ§டன் பேசிய பிறகு தெம்புடன் இருந்துள்ளார் அன்புமணி. இந்தத் தகவல் ராமதாஸுக்குப் போனது. கத்தித் தீர்த்துவிட்டாராம் பெரிய டாக்டர். 'விஜயகாந்த்தைப் பிடித்து நாம எதுக்குத் தொங்கணும்’ என்று கேட்டுள்ளார் அவர். 'அன்புமணிக்கு எப்படியாவது மீண்டும் மந்திரி ஆகிவிடணும் என்று ஆசை. அதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்’ என்று பா.ம.க. பிரமுகர் ஒருவர் கமென்ட் அடித்துள்ளார். ஆனால், இவை எதையும் காதில் வாங்காதவராக அன்புமணி இருந்தார். மாலைக்குள் சுதீஷ் நல்ல தகவல் தருவார் என்று காத்திருந்தார் அன்புமணி. செவ்வாய்க்கிழமை மாலை வரை சுதீஷிடம் இருந்து அன்புமணிக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இவர்கள், சுதீஷிடம் பேச முயற்சித்துள்ளனர். தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்த நிலையில் 19-ம் தேதி புதன்கிழமை காலையில் அடுத்தகட்ட தாக்குதலில் இறங்கி​னார்கள். புதுவை வேட்பாளர் அனந்த​ராமன் தன்னுடைய நட்பு வட்டாரத்தில் இருக்கும் மூன்று பேரை அழைத்துக்கொண்டு நேரடியாக சுதீஷ் வீட்டுக்குப் போனார். இந்தப் பேச்சுவார்த்தையும் சுமுகமாகத்தான் இருந்துள்ளது. 'இனி நாம் தேர்தல் வேலைகளைப் பார்க்க வேண்டியதுதான். இன்னமும் தொகுதிகளைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கக் கூடாது’ என்று சுதீஷ் சொன்னாராம். 'கேப்டனிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்’ என்று அவர்களை அனுப்பிவைத்தார் சுதீஷ். இதனை வந்து அன்பு​மணியிடம் சொன்னார்கள். 'சுதீஷ் பேச்சு நம்பிக்கை தரு​கிறது. என்ன ஆனாலும் இந்தக் கூட்டணியில்தான் நாம் இருப்​போம்’ என்று அன்புமணி அப்போது சொன்னாராம்!
''மனரீதியாக ஒரு முடிவுக்கு வந்தார் அன்புமணி. சேலம் கிடைக்காவிட்டாலும் திருவண்ணாமலையைக் கொடுத்தால்கூட போதும் என்று சொல்லிக்கொண்டார். இதனை பி.ஜே.பி-க்கு சொல்லி அனுப்பினார். 'திருவண்ணாமலையை தே.மு.தி.க-விடம் வாங்கினால், அவர்களுக்குக் கொடுக்க வேறு வாய்ப்பான தொகுதி இல்லை. அது தே.மு.தி.க-வுக்கும் பி.ஜே.பி-க்குமான மோதலாக மாறிவிடும். அவர்களுக்கு 14 இடங்கள்; என்னென்ன தொகுதிகள் என்பது இறுதிசெய்து சொல்லப்பட்டுவிட்டது. இதில் மாற்ற வாய்ப்பே இல்லை’ என்று கறாராக மறுத்துவிட்டார்கள். 'வேலூர், நாகப்பட்டினத்தை ஒப்புக்கொள்வதாக இருந்தால் 18-ம் தேதி இரவுக்குள் தகவல் தாருங்கள். 19-ம் தேதி காலையில் நாங்கள் டெல்லி செல்கிறோம்’ என்று பி.ஜே.பி. தரப்பு பா.ம.க-வுக்கு கெடுவிதித்தது!''

''சேலம், திருவண்ணாமலையில் ஒன்றுகூட தராவிட்டால் எப்படி காம்பரமைஸ் ஆக முடியும் என்று அமைதியாகவே இருந்தது பா.ம.க. தரப்பு. வேலூரில் இருந்த ராமதாஸ் இரண்டையுமே வாங்க வேண்டும் என்றார். இரண்டில் ஒன்றாவது வேண்டும் என்றார் அன்புமணி. இரண்டுமே கிடையாது என்றது பி.ஜே.பி. தரப்பு. 19-ம் தேதி காலையில் முரளிதர் ராவ், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், மோகன்ராஜுலு ஆகிய நான்கு பேரும் டெல்லி செல்ல வேண்டும். செவ்வாய்க்கிழமை இரவு பா.ம.க-வுக்கு எட்டு தொகுதிகளை ஒதுக்கி ஒரு பட்டியலும், அவர்களது எட்டு தொகுதிகளையும் மற்ற கூட்டணிக் கட்சிகளுக்குச் சேர்த்து இன்னொரு பட்டியலும் தயார்செய்தது கமலாலயம். காலை 10 மணிக்கு சென்னை டு டெல்லி விமானம். 19-ம் தேதி காலையில்தான் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜசங்கர் மகன் திருமணம் ஐ.டி.சி. சோழா ஹோட்டலில் இருந்தது. பி.ஜே.பி. தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்ததால், அவர்கள் நான்கு பேரும் நேராக ஐ.டி.சி. சோழா போனார்கள். திருமணம் நடக்க இன்னும் நேரம் இருந்தது. மாப்பிள்ளையை மட்டும் பார்த்து ஆசீர்வாதம் செய்தார்கள்!''

''இவர்கள் நால்​வரிடமும் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தார். 'என்ன கூட்டணி முடிவாகி​விட்டதா?’ என்று ஸ்டாலின் கேட்க, 'முடிவாகிவிட்டது. அந்தத் தகவலை எடுத்துக்​கொண்டுதான் டெல்லி போகிறோம். 20-ம் தேதி ராஜ்நாத் சிங் வருகிறார்’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னார். அப்போது தொல்.திருமாவளவன் இருந்தார். அவரை முரளிதர் ராவுக்கு அறிமுகம் செய்துவைத்தார் பொன்னார். மார்க்சிஸ்ட் எம்.பி-யான டி.கே.ரெங்கராஜனும் இவர்களோடு சேர... அந்த இடம் மூன்று கூட்டணிகளின் சங்கமம் ஆக இருந்தது!''
''இவர்கள் இந்தப் பட்டியலோடு டெல்லி போனார்கள். ராஜ்நாத் சிங்கை சந்தித்தார்கள். இப்படி ஒரு கூட்டணியை அமைத்ததற்காக அவர் இவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் சொன்னாராம். இடைப்பட்ட இந்த நேரத்தில் ராணிப்பேட்டையில் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.முரளி வீட்டில் ராமதாஸ் தங்கியிருந்தார். '20-ம் தேதி காலையில் ராஜ்நாத் சிங் வருகிறார். எனவே நீங்கள் சென்னை வாருங்கள்’ என்று அன்புமணி அழைத்தார். ஆனால், வர மாட்டேன் என்று சொல்லிவிட்டார் ராமதாஸ். அவரை அழைத்துவருவதற்காக சென்னையில் இருந்து ஜி.கே.மணி 20-ம் தேதி காலையில் அனுப்பிவைக்கப்பட்டார். ஜி.கே.மணி தன்னைப் பார்க்க வருகிறார் என்று காடுவெட்டி குருவுக்கு ராமதாஸ் தகவலைச் சொல்ல, அவர் உடனடியாக ராணிப்பேட்டைக்கு வந்துவிட்டார். மணி வருவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே குரு வந்துவிட்டார். ராமதாஸும் குருவும் பேசிக்கொண்டு இருந்தார்கள். 'சென்னை வந்துவிடுங்கள். இதுதான் இறுதிகட்டம். நாம் தாமதிக்க முடியாது’ என்று மணி சொன்னார். சமாதானப் படலம் நடந்தது.
ராணிப்பேட்டை முரளி வீட்டில் இருந்து ஒரே காரில் ராமதாஸ், குரு, மணி மூவரும் புறப்பட்டார்கள். வண்டி வாலாஜாப்பேட்டை டோல்கேட் வரைக்கும் சென்னை வரும் சாலையில்தான் பயணித்தது. ஆனால், திடீரென்று காரை நிறுத்தச் சொன்ன ராமதாஸ், ஜி.கே.மணியை மட்டும் இறங்கச் சொன்னார். 'அன்புவும் நீங்களும் போங்க. நான் வரலை. நான் தைலாபுரம் போறேன்’ என்று சொல்லிவிட்டு காரை எடுக்கச் சொன்னார். கூட்டணிக்கு பெரிய டாக்டர் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார் என்பதை அன்புமணிக்கு சொன்னார் ஜி.கே.மணி. பரஸ்பர போன் கால்கள் பரிமாறப்பட்டன. ஆனாலும், ராமதாஸ் மனதை மாற்ற முடியவில்லை. தைலாபுரத்துக்கு மதியம் 1 மணிக்கு வந்தார் ராமதாஸ். வீட்டுக்குள் கார் போகவில்லை. தன்னோடு வந்த சிலரை மட்டும் அங்கே இறக்கிவிட்டுவிட்டு, நேராக சீர்காழிக்குப் போய்விட்டார். இந்த நேரத்தில் பி.ஜே.பி. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் களைகட்ட ஆரம்பித்தது!''

''பா.ம.க. தரப்பு வருமா, வராதா என்ற குழப்பம் 20-ம் தேதி காலை வரை தொடர்ந்தது. அதனால் பி.ஜே.பி. மூன்று விதமான பேனர்களைத் தயாரித்தது. ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி, விஜயகாந்த், ராமதாஸ், வைகோ, ஈஸ்வரன், பச்சமுத்து ஆகியோர் படத்தைப் போட்டு ஒரு ஃப்ளெக்ஸ், இதில் ராமதாஸ் படம் இல்லாமல் ஒரு ஃப்ளெக்ஸ், ஈஸ்வரன் படம் இல்லாமல் ஒரு ஃப்ளெக்ஸ் ஆகிய மூன்றை தயாரித்தார்கள். எந்த ஃப்ளெக்ஸ் வைப்பது என்று 12.50 வரைக்கும் குழப்பம் நீடித்தது. 11 மணிவாக்கில் பா.ம.க. பிரமுகர்களான ஜெயராமன், ராமமுத்துக்குமார் ஆகிய இருவரும் வந்துவிட்டார்கள். எனவே, பா.ம.க. வருவது உறுதியானது. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன், திடீர் ஆலோசனையில் இருந்தார். அதனால்தான் அவர் வருவாரா, மாட்டாரா என்று சந்தேகப்பட்டது பி.ஜே.பி. 12.30 மணிக்கு ஜி.கே.மணி வந்தார். அடுத்து அன்புமணி வந்தார். ராஜ்நாத் சிங்கை விமானநிலையத்தில் வரவேற்றுவிட்டு வைகோ வந்தார். இறுதியாக விஜயகாந்த்தும் சுதீஷ§ம் வந்தார்கள். இவ்வளவு பேரும் வந்து சேருவதற்குள் மதியம் ஒன்றரை மணி ஆகிவிட்டது. 1.30 மணி முதல் 3 வரைக்கும் ராகு காலம் என்பதால் 3 மணிக்குப் பிறகுதான் அறிவிப்பு என்று தள்ளிவைத்தார்கள். இதனை அறிவிப்பதற்கு முன்னதாக, விஜயகாந்த், வைகோ, அன்புமணி ஆகியோருக்கு தனித்தனி அறைகள் அந்த ஹோட்டலில் போடப்பட்டு இருந்தன. அங்கு தங்கியிருந்த தலைவர்கள் பரஸ்பரம் பேசிக்கொண்டார்கள். வைகோவும் விஜயகாந்த்தும் சுமார் 10 ஆண்டுகள் கழித்து சந்திக்கிறார்கள். அன்புமணியும் விஜயகாந்த்தும் இதுவரை சந்தித்ததே இல்லை. ''
இறுதிக்கட்ட காம்பரமைஸ்
''தங்களுக்கு திருவண்ணாமலை வேண்டும் என்பதில் பா.ம.க. உறுதியாக இருந்தது. அதனை தே.மு.தி.க-விடம் வாங்கி கைமாற்றிவிட்டார்கள். திருவண்ணாமலைக்குப் பதிலாக பி.ஜே.பி. தன்வசம் இருந்த திருப்பூரை தே.மு.தி.க-வுக்கு விட்டுக்கொடுத்தது. சில நாட்களுக்கு முன்பு இதே திருப்பூரை வைத்துத்தான் பி.ஜே.பி-க்கும் தே.மு.தி.க-வுக்கும் மோதல் நடந்தது உமக்கு ஞாபகம் இருக்கும். இதில் லாபம் தே.மு.தி.க-வுக்குத்தான். சேலம் கேட்டார்கள் அல்லவா? அதற்குப் பதிலாக நாகப்பட்டினத்தை பா.ம.க. வாங்கிக்கொண்டது. இப்படித்தான் சுமுகச் சூழ்நிலையை எட்டினார்கள். 'சுதீஷ§ம் அன்புமணியும்தான் விட்டுக்கொடுத்தலோடு பேசினார்கள். அவர்கள் இருவரும் இல்லாவிட்டால் இந்த சமாதானமே நடந்திருக்காது’ என்கிறார்கள்.''
'ஏழு சீட்டுக்கு காம்ப்ரமைஸ் ஆன ம.தி.மு.க
''பி.ஜே.பி., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா எட்டு தொகுதிகள் என்றுதான் ஆரம்பத்தில் முடிவானது. ஈஸ்வரன், பச்சமுத்து, புதுவை ரங்கசாமி ஆகிய மூன்று பேர் கூட்டணிக்குள் வருவதால், ம.தி.மு.க-விடம் இருக்கும் ஒரு சீட்டை எடுத்தாக வேண்டிய நெருக்கடி பி.ஜே.பி-க்கு வந்தது. அவரிடம் நேரடியாகச் சொன்னால் என்ன ஆகுமோ என்று திணறினார்கள். ராம் ஜெத்மலானி சொன்னால் வைகோ கேட்பார் என்று நினைத்தார்கள். ராம் ஜெத்மலானிக்கு யார் சொல்வது? நரேந்திர மோடி சொன்னால்தான் ராம் ஜெத்மலானி கேட்பார் என்று முடிவெடுத்தார்கள். மோடி, ராம் ஜெத்மலானியிடம் சொல்ல, அவர் வைகோவிடம் சொல்ல, அவர் ஒப்புக்கொண்டார். 'ஒரு சீட் குறைப்பதை நான் ஏற்றுக்கொள்வதால் கேட்ட தொகுதிகள் தர வேண்டும்’ என்று வைகோ சொன்னார்.
கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கும்​போதே விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, காஞ்சிபுரம், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளைச் சொல்லி, இவற்றை ம.தி.மு.க-வுக்குத் தர வேண்டும் என்றார் வைகோ. இதில் பொள்ளாச்சி மட்டும் பி.ஜே.பி-க்கா, ஈஸ்வரனுக்கா என்ற குழப்பம் இருந்தது. எனவே, பொள்ளாச்சியை விட்டுக்கொடுத்த வைகோ தேனியைக் கேட்டு வாங்கினார். கூடுதலாக கடலூர், தென்காசியைக் கேட்டார். கடலூருக்காக விஜயகாந்த்தும் ராமதாஸும் மோதிக்கொண்டதால், கடலூரை விட்டுவிட்டு ஸ்ரீபெரும்புதூர் கேட்டார். இது பி.ஜே.பி-யின் தொகுதி. டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக அங்கே பணியாற்றிவந்தாராம். ஆனாலும், கூட்டணிக் கட்சி கேட்கிறது என்பதற்காக விட்டுத்தரத் தயாரானது பி.ஜே.பி. தென்காசி தொகுதியில் பி.ஜே.பி. போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்று அவர்கள் சொன்னார்கள். தஞ்சாவூர் தரப்பட்டது. ஆனால் அதனை வைகோ ஏற்கவில்லை. தென்காசியே இறுதியில் தரப்பட்டுவிட்டது.!''
''வட மாவட்டங்களில் முக்கியத் தொகுதிகளை பா.ம.க. வாங்கியதைப்போல தென் மாவட்டங்களில் முக்கியத் தொகுதிகளை ம.தி.மு.க. வாங்கி உள்ளது!''
''ஆமாம்! இந்த மொத்தப் பேச்சுவார்த்தைகளில் பி.ஜே.பி-க்கு சந்தோஷம் இல்லை என்ற கவலை ரேகைகள் கமலாலயத்தில் ஓடுகின்றன!''

''மோடி அலை வீசுகிறது; பி.ஜே.பி-க்கு செல்வாக்கு கூடியிருக்கிறது; விஜயகாந்த் வந்து விட்டார்; வைகோ வந்துவிட்டார்; ராமதாஸ் வந்துவிட்டார்... என்பதெல்லாம் தமிழக பி.ஜே.பி-யினருக்கு சந்தோஷம் கொடுத்தாலும், முக்கியமான தொகுதிகளை பி.ஜே.பி. தலைவர்கள் கவலையில்லாமல் தாரைவார்த்துவிட்டார்கள் என்பதே இவர்களின் கோபத்துக்குக் காரணம். 'திருச்சி, சேலம், மதுரை, திருப்பூர் ஆகிய நான்கிலும் பி.ஜே.பி. நின்றிருக்க வேண்டும். ஆனால், அதை தே.மு.தி.க-வுக்குக் கொடுத்துவிட்டார்கள். ஸ்ரீபெரும்புதூர், தென்காசி ஆகிய இரண்டும் பி.ஜே.பி-க்கு வாய்ப்புள்ள தொகுதிகள். ஆனால், இரண்டையும் ம.தி.மு.க-வுக்குக் கொடுத்து​விட்டார்கள். பொள்ளாச்சி நமக்கு சாதக​மானது. அது ஈஸ்வரனுக்குத் தரப்பட்டுள்ளது. இப்படிப் பார்த்தால் பி.ஜே.பி-க்குச் செல்வாக்கான ஏழு தொகுதிகளை விட்டு​விட்டோம்’ என்கிறார்கள். 'கூட்டணிக் கட்சிக்காக விட்டுத்தருகிறோம் என்ற காரணத்தைச் சொல்லி சொந்தக் கட்சியில் உள்ள சிலருக்குக் கட்டையைப் போட இந்தப் பேச்சுவார்த்தைகளைச் சிலர் பயன்படுத்திக்கொண்டார்கள்’ என்றும் சொல்கிறார்கள்

தமிழருவியைப் பாராட்டிய ராஜ்நாத்!
பி.ஜே.பி. கூட்டணிக் கட்சி தலைவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் மேடையில் தமிழருவி மணியனுக்கும் ஒரு நாற்காலி ஒதுக்கப்பட்டு இருந்தது. அப்போது பேசிய பி.ஜே.பி. தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், ''இந்தக் கூட்டணியைத் திட்டமிட்டு ஆளாக்கித்தந்த தமிழருவி மணியனை நான் மனமாறப் பாராட்டுகிறேன்'' என்று சொன்னார். அப்போது அரங்கம் அதிர கைத்தட்டல்கள்.

ராஜபாளையத்தில் இருந்து ராஜபாட்டை!

ராஜபாளையம் அருகில் உள்ள கிழவிகுளம் கிராமத்தைச் சேர்ந்த கதிரேசன், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமானவர். 1980-களில் கருணாநிதி நீதி கேட்டு நெடும்பயணம் சென்றபோது, அவரோடு நடந்து சென்றவர். அவரது மகன் தமிழ் செல்வக்குமார், இப்போது அழகிரியின் ஆதரவாளராக இருக்கிறார். அவர் சமீபத்தில் அழகிரியைச் சந்தித்தார். 'உங்கள் அப்பா வாங்கிய கடனை நீங்கள்தான் அடைக்க வேண்டும்’ என்று அழகிரியைப் பார்த்துச் சொன்னார். விவரமாகச் சொல்லச் சொன்னார் அழகிரி. 'எங்களது கிராமத்துக்கு வந்து தலைவர் கலைஞர் கொடியேற்றுவதற்காக என் அப்பா கதிரேசன் பணம் வசூலித்துக் கொடுத்தார். திடீர் உடல்நலக் குறைவு காரணமாக தலைவரால் வர முடியவில்லை. இப்போது நீங்கள் எனது மகள் கவிசேனாவின் காதணி விழாவுக்கு வந்து அந்தக் கடனை அடைக்க வேண்டும்’ என்றார். அந்த விழா, வரும் 23-ம் தேதி ராஜபாளையத்தில் நடக்க இருக்கிறது.
இந்த நிலையில் அழகிரி கட்சியை விட்டு நீக்கப்​பட்டு, கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியுள்ளது. ''அனைத்துக்கும் 23-ம் தேதி ராஜபாளையத்தில் பதில் சொல்கிறேன்'' என்று சொல்லிவருகிறாராம் அழகிரி.

ad

ad