ஆபாச பாடல் பிரச்சினையால் போலீஸ் வழக்கில் சிக்கியுள்ள நடிகர் சிம்புவுக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்ற படை என்ற
அமைப்பு சார்பில் நேற்று மாலை போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த அமைப்பின் தலைவர் வீரலட்சுமி தலைமையில் ஏராளமானோர் தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில் கூடினார்கள். நடிகர் சிம்பு பிரச்சினையில் அவருக்கு ஆதரவாக செயல்படாமல் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக, நடிகர் சங்கத்தின் மீது புகார் கூறி முற்றுகை போராட்டம் நடத்த போவதாக, தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகம் உள்ள அபிபுல்லா சாலையை நோக்கி போராட்டக்காரர்கள் புறப்பட்டனர்.
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். போராட்டக்காரர்கள் அப்போது நடிகர் சிம்புவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார்கள். பின்னர் ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை எமிஜாக்சன் உருவ படத்தை அங்கு தீ வைத்து எரித்தார்கள். போலீஸ் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தப்பட்டதால் தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி உள்ளிட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.