புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2015

அம்பலத்துக்கு வந்த விஜயகாந்த் 'டிராமா'

சென்னையில், கடந்த வாரம், பா.ஜ., தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், மோகன்ராஜுலு ஆகியோர், தே.மு.தி.க., த
லைவர் விஜயகாந்தை சந்தித்தனர்; கூட்டணியில் தொடரும் படி கோரிக்கை விடுத்தனர்.


நேற்று முன்தினம், மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, முத்தரசன், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர், விஜயகாந்தை சந்தித்தனர்; தங்கள் அணிக்கு வருமாறு அழைத்தனர்.அதே நாளில், தி.மு.க., தலைவர் கருணாநிதியும், தங்கள் கூட்டணிக்கு வருமாறு, விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்தார்.அடுத்தடுத்து நடந்த இந்நிகழ்வுகள் காரணமாக, 8 சதவீத ஓட்டு வங்கி உள்ள, தே.மு.தி.க.,வை, எப்படியும் கூட்டணியில் சேர்த்து விட வேண்டும் என, இக்கட்சிகள் துடிப்பதாக செய்திகள் பரவின.

உண்மையில், இந்த தொடர் சந்திப்புகளை தானாகவே முன் வந்து விஜயகாந்த் ஏற்படுத்திய தகவல், இப்போது வெளியாகி உள்ளது.இந்த கட்சிகளுக்கு அவரே அழைப்பு விடுத்ததும், அதன் மூலமாக நடந்த சந்திப்புகளை காட்டி, அரசியல் அரங்கில் தனக்கான செல்வாக்கை கூட்டவும், அவர் திட்டமிட்டு காய் நகர்த்தி இருக்கிறார் என்பதும் அம்பலமாகி உள்ளது.'இது, அக்கட்சியின் கூட்டணி ஆதாயத்திற்கான முன் பேர நடவடிக்கை' என, விஜயகாந்தை சந்தித்த கட்சியினர், வெளிப்படையாகவே குற்றஞ் சாட்டுகின்றனர்.

இது குறித்து, அந்த கட்சிகளின் வட்டாரங்கள் கூறியதாவது:அ.தி.மு.க., தவிர்த்து அனைத்து கட்சியினரும், தன்னை சுற்றி வர வேண்டும் என, விஜயகாந்த் நினைக்கிறார்.தி.மு.க., - பா.ஜ., மற்றும் மக்கள் நலக் கூட்டணி என, தனக்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதை பயன்படுத்தி, தி.மு.க., கூட்டணியில், தன் பேரத்தை அதிகப்படுத்த, லாவகமாக காய் நகர்த்துகிறார்.

பா.ஜ., தலைவர்களையும், மக்கள் நலக் கூட்டணி தலைவர்களையும், விஜயகாந்த் தரப்பில் இருந்து தான் அழைத்தனர்; அதன் படியே, அவர்கள் விஜயகாந்தை சந்தித்துள்ளனர். ஆனால், வெளியே அந்த தலைவர்கள் விருப்பப்பட்டு, விஜயகாந்தை சந்தித்தது போல தகவல் பரப்பப்பட்டது.

அந்த தலைவர்களும், அதற்கு தோதாக, 'கூட்டணிக்கு அழைக்கும் முகமாக சந்தித்தோம்' என,கூறினர். அவர்கள் அப்படி கூறிய, இரண்டு மணி நேரத்தில், கருணாநிதியும் அழைப்பு விடுத்தார்; இதை தான் விஜயகாந்த் எதிர்பார்த்தார்.இனி மேல், தன் பேரத்தை தி.மு.க.,வுடன் அவர் தொடருவார். பேரத்தை அதிகரித்து, கூடுதல், 'சீட்'களை பெற்றால், தி.மு.க., வெற்றி பெற்றாலும், கூட்டணி ஆட்சி தான்வரும். அதற்காவது, விஜயகாந்தின் பேரம் பயன்படட்டும்.இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின

ad

ad