ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரி
மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தத்தொடரில் இன்று வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் பொற்பதி அணியை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் அணி மோதவுள்ளது. தொடர்ந்து மாலை 5மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் அரியாலை ஐக்கிய அணியை எதிர்த்து ஐயனார் அணி மோதவுள்ளது.