புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2015

அ.தி.மு.க.,வுக்கு சாதகமான அதிகாரிகள் மாவட்டங்களில் நியமிக்க முடிவு

சட்டசபை தேர்தல் வர உள்ள தால், அ.தி.மு.க.,வுக்கு சாதகமான அதிகாரிகளை, கலெக்டர்களாக நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளதாக
, தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. இதற்கான பணிகளில், தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையால், பெரும்பாலான மாவட்டங்களில், அ.தி.மு.க.,வின் இமேஜ் சரிவடைந்துள்ளது. அதை மீண்டும் துாக்கி நிறுத்தவும், தேர்தல் சமயத்தில் வாக்காளர்களை தைரியமாக சந்திக்கவும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதற்கான யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

கடந்த, லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்பட்ட கலெக்டர்கள் குறித்த பட்டியலை, தயார்செய்து தரும்படி, அமைச்சர்களுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதுள்ள கலெக்டர்களின் நடவடிக்கை, மக்களை அணுகும் முறை குறித்த விவரமும் கேட்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப அ.தி.மு.க., செல்வாக்கு சரிந்துள்ள மாவட்டங்களில், தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை, கலெக்டர்களாக நியமிக்க, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறதுதி.மு.க., கிலி: இந்த தகவல், தி.மு.க.,வினர் மத்தியில் பீதியை கிளம்பி உள்ளது. அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் மாற்றி, புதிய நபர்களை தேர்தல் பணிக்கு நியமிக்குமாறு, தேர்தல் ஆணையத்திடம், அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்த உள்ளதாக, தி.மு.க., வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றன

ad

ad