மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்களாக கடமையாற்றிய சிலருக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் மரண தண்டனை தீர்ப்புகள் வழங்கப்படும் நிலைமை காணப்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இவர்கள் பாரிய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளமை குறித்த தகவல்கள் கிடைத்திருப்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நபர்களுக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதுடன் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பிரபல விளையாட்டு வீரர் கொலை செய்யப்பட்டமை, கப்பம் பெற்றமை, ஆட்களை கடத்திச் சென்றமை ஆகியன தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களும் அதில் அடங்குகின்றனர்.
இவர்களில் சிலருக்கு வெலிகடையில் தங்குமிடம் கிடைக்கும் என்றும் அமைச்சர் ராஜித கூறியுள்ளார்.
அரசாங்கம் சட்ட ரீதியாக மாத்திரம் செயற்பட்டு வருவதால், இந்த நடவடிக்கைகள் மெதுவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனை புரிந்து கொண்டுள்ள சிலர் அதற்கு முன்னர் அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி செய்து வருகின்றனர் எனவும் அமைச்சர் ராஜித மேலும் தெரிவித்துள்ளார்.