புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2015

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இல்லத்திற்கு சென்று பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 91-வது பிறந்த நாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, நிதின்கட்காரி உள்பட கட்சி நிர்வாகிகள், மத்திய மந்திரிகள் டெல்லி கிருஷ்ணமேனன் மார்க்கில் உள்ள வாஜ்பாய் வீட்டுக்கு சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். 

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.வாஜ்பாயின் தீவிர ஆதரவாளரான பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து டெல்லி வந்தடைந்ததும் விமான நிலையத்தில் இருந்து நேராக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வீட்டுக்கு சென்று அவருக்கு நேரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னரே அவர் பிரதமரின் இல்லத்துக்கு சென்றார்.

ad

ad