பெங்களூரு விமான நிலையத்திற்கு குவைத்தில் இருந்து அதிகாலை விமானம் வந்தது. அப்போது பெங்களூருவில் வானிலை
மோசமாக இருந்ததால் விமானம் தரையிறங்க முடியவில்லை. இதனால் அந்த விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.
அதேபோல், கோவாவில் இருந்து பெங்களூரு சென்ற விமானமும் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. பின்னர் அங்கு வானிலை சீரானதும் சென்னைக்கு வந்த 2 விமானங்களும் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றன.