கொழும்பில் இன்று பிப 4.30 மணி தொடக்கம் 7.30 மணிவரை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசிய
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இச்சந்திப்பு தொடர்பாக வடக்கு முதல்வரிடம் கேட்டபோது,
“நாங்கள் பல விடயங்களை சுமூகமாகப் பேசிக் கொண்டோம். கூடிய விரைவில் மேலும் பல விடயங்கள் சம்பந்தமாக பேசிக் கொள்வோம்.
மக்களின் நன்மைதான் எங்கள் இருவருக்கும் முக்கியமானது, ஆகவே அது சம்பந்தமாக தொடர்ந்து இருவரும் பேசிக் கொள்ள வேண்டுமென்று முடிவு எடுக்கப்பட்டது.
விரைவில் சட்டத்தரணி கனகீஸ்வரன் தலைமையில் இன்னுமொரு பேச்சுவார்த்தை நடைபெறும் என் முதலமைச்சர் தெரிவித்தார்.