போலி பிறப்புச் சான்றிதழ்களின் மூலம் அடையாள அட்டை பெற்றுக் கொள்ள முயற்சித்த 500 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் சரத்குமார குறிப்பிடுகையில்,
கடந்த காலங்களில் சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் பிறந்த திகதி மற்றும் பெற்றோரின் பெயரை மாற்றியமைத்து அடையாள அட்டைக்காக விண்ணப்பித்திருந்தனர்.
எனினும் இவர்கள் மாணவர்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பதிலாக உத்தேச வயது அடிப்படையில் அவர்களுக்கான அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று வேறு தேவைகளின் நிமித்தம் போலியான பிறப்புச் சான்றிதழ்களை முன்வைத்து அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த சுமார் 500 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்பதிவுத்திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.