நவாஸ் ஷெரீப்பின் அழைப்பின் பேரிலேயே நரேந்திர மோடி பாகிஸ்தான் சென்றார் என பாஜக விளக்கம் அளித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து இன்று (வெள்ளி) டெல்லி திரும்பிய நரேந்திரமோடி, திடீனெர பாகிஸ்தான் சென்றடைந்தார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாஜக செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களிடம் விளக்கினார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி திரும்பும் வழியில் லாகூருக்கு வருமாறு நவாஸ் ஷெரீப் விடுத்த அழைப்பின் பேரிலேயே நரேந்திர மோடி பாகிஸ்தான் சென்றார் என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்ததாக, பாஜக செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் சர்மாக செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், இது வரவேற்கத்தக்க ஒன்றாகும். அண்டை நாட்டுத் தலைவர்கள் அனைவரையும் பதவியேற்பு விழாவுக்கு மோடி அழைத்திருந்தது நினைவிருக்கலாம் என்றார்.