நத்தார் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் இருந்து 8 சிறைக்கைதிகள் இன்று ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் விடுதலையானவர்களில் 7பேர் ஆண்களும் ஒருவர் பெண்ணுமாக உள்ளடங்குகிறார்கள்;.
இதேவேளை இவ்வாறு விடுதலையாகும் 8பேரில் இருவர் இருவேறான குற்றங்களில் தொடர்புபட்டள்ளமையால் முதல் குற்றத்திற்கு தண்டனை வழங்கப்பட்ட வழக்கில் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலையானாலும், மேலதிகமாக இருப்பு வழக்குகள் இருப்பதனால் குறித்த இரு கைதிகளும் மீண்டும் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என்றும் யாழ்.சிறைச்சாலை அதிகாரி எஸ்.இந்திரகுமார் மேலும் தெரிவித்தார்