-
17 அக்., 2022
சீனாவின் நெடுஞ்சாலை திட்டம்: இலங்கை அரசாங்கத்துக்கு 38 பில்லியன் செலவு
ரொஷானின் பதவியைப் பறித்தார் மஹிந்த!
![]() ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவிக்கு நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். |
தமிழருக்கு தமது தலைவிதியை தீர்மானிக்கும் சுயநிர்ணய உரிமை உள்ளது:வேலன் சுவாமி
![]() சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில் 10 ஆம் திகதி நடந்த கலந்துரையாடலில் தமிழ் மக்களின் சுயநிர்ணயம், சர்வதேச நீதி விசாரணை என்பனவற்றை வலியுறுத்தி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல்வருமான தவத்திரு வேலன் சுவாமிகள் நிகழ்த்திய உரை |
அஜாக்ஸ்சில் குத்திக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்!
![]() ஒன்ராறியோவில் டார்ஹாம் (Durham) பிராந்தியப் காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அருந்தகம் ஒன்றுக்கு வெளியே 28 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். |
பிரான்சில் நடந்த பாரிய போராட்டம்!! 140,000 பேர் பங்கேற்பு
16 அக்., 2022
மகிந்தவுக்கு எதிராக வெடித்த போராட்டம்..! 15க்கும் மேற்பட்டோர் கைது: படையினர் குவிப்புபோராட்டம்
நாவலப்பிட்டியில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் கடும் எதிர்ப்புடன் போராட்டம் நடத்தப்பட்டதையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி அமைப்பாளர் உட்பட 10 கைத செய்யப்பட்டனர்.
வெற்றிலைக்கடை என்ற போர்வையில் பாடசாலை அருகில் போதை பாக்கு விற்பனை! கையும் களவுமாக சிக்கிய நபர்
மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சங்கானை சிவபிரகாசா வித்தியாலயத்திற்கு அண்மையில் நீண்ட நாள்களாக போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அணு ஆயுதங்களுடன் களமிறங்கியது நேட்டோ!
![]() ரஷ்யாவிற்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தீவிரமடைந்து வருவதால், 14 நாடுகளின் விமானப் படையை உள்ளடக்கிய நேட்டோவின் அணு ஆயுத பயிற்சி இந்த வாரம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. போர் நடவடிக்கையின் உச்சகட்டமாக கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நான்கு முக்கிய நகரங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் கடந்த வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் |
T20 உலகக் கிண்ண முதல் போட்டியில் இலங்கைக்கு அதிர்ச்சி தோல்வி
நமீபியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான T20 உலகக் கிண்ண முதல் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியினை நமீபியா 55 ஓட்டங்களால் வீழ்த்தி அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
ரணிலுக்கு இறுதி நிபந்தனைகளை விதிக்கப்போகும் பொதுஜன பெரமுன
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் பெறுவதை தடைசெய்யும் விதி உள்ளிட்ட இரண்டு விதிகளை நீக்குவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன விரும்புவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர
பிரான்ஸ் நாடு ரஷ்யாவுக்கு விமானங்களை வழங்கியதா ? EU- நாடுகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளது
15 அக்., 2022
முகமாலையில் விபத்து - 47 பேர் காயம்
![]() பளை - முகமாலை பகுதியில் இன்று காலை பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் 47 பேர் காயமடைந்துள்ளனர் |
மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
துருக்கி சுரங்கத்தில் வெடி விபத்து: 22 பேர் பலி - நூற்றுக்கணக்கானோர் பூமிக்கடியில் சிக்கி தவிப்பு
![]() துருக்கியின் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்துள்ளனர் மற்றும் டஜன் கணக்கானோர் படுகாயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு துருக்கியின் பார்டின் (Bartin) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு விபத்தில் டஜன் கணக்கானோர் சுரங்கத்துக்குள் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது |
அதிபயங்கர நீர்மூழ்கிக் கப்பலை ஐரோப்பாவுக்கு அருகில் அனுப்பியுள்ள புடின்!
![]() முழு பிரித்தானியாவையே கடலில் மூழ்கடிக்க வல்ல நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை ஐரோப்பாவுக்கு அருகில் புடின் அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அச்சத்தை உருவாக்கியுள்ளது. உலகிலேயே பெரிய நீர்மூழ்கிக் கப்பல் என கருதப்படும் K-329 Belgorod என்னும் அந்த நீர்மூழ்கிக் கப்பல், ரஷ்யாவுக்கு வடக்கே, Barents கடலில் சமீபத்தில் காணப்பட்டுள்ளது. |
40க்கும் மேற்பட்ட நகரங்களில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
ராஜபக்ஷவினர் மீதான வெறுப்பை தீவிரப்படுத்துகிறார் ஜனாதிபதி!
![]() ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் பலப்படுத்தும் முயற்சியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ளார். ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பை ஜனாதிபதி திட்டமிட்ட வகையில் தீவிரப்படுத்துகிறார் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். |
ஆயுதமோதலில் காணாமல்போதல், உயிரிழப்பு சாதாரணமே!
![]() விடுதலைப்புலிகளை நான் அழித்ததாக தெரிவிக்கப்படுவது சரியானதில்லை என தெரிவித்துள்ள நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் காணாமல்போனவர்கள் குறித்த பதில்களை இலங்கை அரசாங்கம் வழங்கவேண்டும் வடக்கிற்கு அதிகார பகிர்வு அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார் |
யாழ். நகரில் சடலமாக மீட்கப்பட்ட ஒப்பந்தகாரர் - மரணத்துக்கான காரணம் வெளியானது!
![]() யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையில் புதிதாக அமைக்கப்படும் கட்டடத் தொகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் நிலைதடுமாறி படிக்கட்டுகளில் வீழ்ந்து தலையில் ஏற்பட்ட படுகாயம் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. |
மீண்டும் நாளை மேடையேறுகிறார் மஹிந்த!
![]() முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நாவலப்பிட்டி நகரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சிக் கூட்டம் இடம்பெறவுள்ளது. |
மண்மேட்டில் புதையுண்ட மூவரை தேடும் பணி தொடர்கிறது!
![]() வரக்காபொல - தும்பிலியத்த பகுதியில் நேற்று மண் மேடு சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் நால்வர் புதையுண்டனர். அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு இருந்தார். காணாமல் போன மூவரை தேடும் பணிகள தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இன்று முற்பகல் 10.30 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
த்ரில் வெற்றியுடன் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி
பிரான்ஸில் தமிழர்கள் வாழும் பகுதியில் அமலுக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடு!
![]() பிரான்ஸில் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதை அடுத்து, (Seine-Saint-Denis) மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடு ஒன்று அமுலுக்கு வந்துள்ளது. அதற்கமைய, இம்மாவட்டத்தில் உள்ள நிரப்பு நிலையங்களில் கொள்கலன்களில் (jerry cans) எரிபொருட்களை விற்பனை செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது |
மைத்திரிக்கு எதிரான விசாரணையை 10 வாரங்களுக்கு இடைநிறுத்த உத்தரவு!
![]() ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பிலான விசாரணையை இன்று முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது |
ஞானசார தேரருக்கு பிடியாணை!
![]() பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேலதிக நீதிவான் ஸ்ரீலணி பெரேரா, இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார் |
நாவாந்துறை விபத்தில் இளைஞன் பலி!
![]() யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா ரக வாகனம் என்பன மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் வாகனத்தில் பயணித்த 35 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் |
கடன் மறுசீரமைப்பு - இந்தியா, சீனா மௌனம்!
கடன் மறுசீரமைப்பு - இந்தியா, சீனா மௌனம்! [Friday 2022-10-14 18:00] |
![]() இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து துரிதமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என பரிஸ் கிளப் தெரிவித்துள்ளது |
திருகோணமலை துறைமுகம் இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி!
![]() திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுடன் இணைந்து மூலோபாய துறைமுகமாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தலை இலக்காகக் கொண்டு இவ்வாறான தீர்மானம் எடுக்கப்படாமல் எதிர்கால சந்ததியினரை இலக்காகக் கொண்டு எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார் |
மார்க்கம் விபத்தில் தமிழ் இளையோர் இருவர் பலி
![]() கனடாவின் ரொறன்ரோ மார்க்கம் நகரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஈழத்தமிழ் பூர்வீகத்தை கொண்ட இளையோர் இருவர் உயிரிழந்துள்ளனர் |
6 கடற்படையினருடன் படகு மாயம்!
![]() ஆறு கடற்படையினருடன் படகொன்று காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட படகில் இருந்தவர்களுடன் தொடர்புதுண்டிக்கப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பிட்ட கப்பலை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
13 அக்., 2022
சுமந்திரன், சாணக்கியனை சந்தித்தார் சொல்ஹெய்ம்!
![]() நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது |
7 வயது மகளை வன்புணர்ந்த தந்தை? - யாழ்ப்பாணத்தில் கொடூரம்.
![]() ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார் எனும் குற்றச்சாட்டில் 30 வயதான குடும்பஸ்தர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். |
வருமான மூலங்களை பயன்படுத்தாத வவுனியா நகரசபை
சுவிஸ் தூதரக அதிகாரி கானியாவுக்கு எதிரான வழக்கு : தற்போதைய நிலை என்ன ?
மொட்டு கட்சியில் பின்பக்கத் திரையில் இருந்து மகிந்த,கோட்டாபய , பசில் ராஜபக்ச அதிரடியாக நீக்கம்
அதன்படி, இன்று நடைபெற்ற மொட்டு கட்சியின் ஊடகவியலாளர்
2 லட்சம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளாராக் லிஸ்- ஊழியர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளார்கள்
உக்ரைனின் சில பகுதிகளை இணைக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு ஐநா கண்டனம்
உக்ரைனில் பகுதியளவு ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகளை ரஷ்யாவின் சட்டவிரோதத்துடன் இணைக்கும் முயற்சியைக் கண்டித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை வாக்களித்தது மற்றும் இந்த நடவடிக்கையை அங்கீகரிக்க வேண்டாம் என்று
பொதுமக்களிடம் உக்ரைன் அரசாங்கம் முன்வைத்துள்ள முக்கிய வேண்டுகோள்!
![]() பல மில்லியன் மக்கள் பாதிக்கப்படும் வாய்ப்பிருப்பதாக கூறி, எரிசக்தியை சேமிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உக்ரைன் அரசாங்கம் முன்வைத்துள்ளது. கிரிமியா பாலம் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைன் மீது கொலைவெறி தாக்குதலை முன்னெடுத்தது ரஷ்யா. இதனால் உக்ரைனின் மிசார திட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது. |
சுமந்திரன் படுகொலை முயற்சி வழக்கு- சந்தேக நபர்களுக்கு பிணை!
![]() தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. |
இந்தியா பக்க பலமாக இருக்க வேண்டும்!- இந்தியாவிடம் வலியுறுத்திய ஜனநாயகப் போராளிகள்.
![]() பூரண அதிகாரங்களுடன் கூடிய மாகாணசபை, 13வது திருத்தச்சட்டத்தைத் தாண்டி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய வகையிலான அரசியற் தீர்விற்கு இந்தியா பக்க பலமாக இருக்க வேண்டும் என இந்தியப் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். |
12 அக்., 2022
மைத்திரியை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு!
![]() முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டின் விசாரணையை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுமா? இல்லை? குறித்த உத்தரவை எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது |
அகதிகளுக்கு அதிகம் உதவும் சுவிஸ்!
![]() நேற்று வெளியான ஆய்வு ஒன்றின் முடிவுகள், சுவிட்சர்லாந்து மற்ற நாடுகளைவிட அகதிகளுக்கு அதிகம் உதவுவதாக தெரிவித்துள்ளன. புலம்பெயர்ந்தோருக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் மேற்கொண்ட அந்த ஆய்வு, சுவிட்சர்லாந்து ஆபத்தான நடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான அகதிகளை ஆண்டுதோறும் வரவேற்பதாகவும், மற்ற நாடுகளைவிட சிறந்தவகையில் அவர்களை குடியமர்த்த உதவுவதாகவும் தெரிவிக்கிறது |
10 அக்., 2022
தமிழரசுப் பதவிகளில் இருந்து விலகினார் பரஞ்சோதி
![]() தமிழரசு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மாவை சேனாதிராஜா கட்சியினை வினைத்திறனாக கொண்டு செல்ல முடியாத ஓர் இயலாமையான நிலையில் காணப்படுகின்றார் அதனால், கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் தான் விலகுவதாக தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினரும், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அரியகுட்டி பரஞ்சோதி தெரிவித்துள்ளார் |
இனி காலஅவகாசம் வழங்கவே கூடாது
![]() இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் புதிய தீர்மானத்திலுள்ள பரிந்துரைகளையும், சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு ஐ.நாவும், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதைவிடுத்து இலங்கை அரசுக்குத் தொடர்ந்து கால அவகாசம் வழங்கி வந்தால் அதில் எந்தப் பயனும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார் |
3 இராணுவ அதிகாரிகளுக்கு தடை போடவுள்ள கனடா
![]() இலங்கையை சேர்ந்த மூன்று இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக கனடா தடைகளை விதிக்கவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இலங்கை இராணுவ அதிகாரிகள் உடனடியாக தடைகளை எதிர்கொள்ளவுள்ளனர் |
காலிமுகத்திடலில் பதற்றம் - போராட்டக்காரர்கள் துரத்திப் பிடித்து கைது!
கொழும்பு, காலி முகத்திடலில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது |
5 அக்., 2022
சிறீதர் திரையரங்கிற்கு கடத்தபட்ட மீனவ தலைவர்கள்?
யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் இரு பெண்கள் கைது!
![]() யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த இரு பெண்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். மணியந்தோட்டம் பகுதியில் 5.5 கிராம் ஹெரோயினுடன் 36 வயதான பெண்ணும், கொக்குவில் பகுதியில் 40 வயதான பெண் 2.5 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் |
கனடா மாணவர் வீசா விண்ணப்பம் 10 மடங்கு அதிகரிப்பு!
![]() இலங்கையில் கடந்த ஐந்து வருடங்களில் பெறப்பட்ட மாணவர் வீசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் பத்து மடங்கு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் தெரிவித்துள்ளார் |
தீவுகளை அபிவிருத்தி செய்ய புதிய அதிகாரசபை
![]() நாடெங்கும் உள்ள தீவுக் கூட்டத்தை அபிவிருத்தி செய்து நாட்டின் பொருளாதாரத்தை வினைத்திறனாகப் பயன்படுத்தும் நோக்கில், இலங்கை தீவுகள் அபிவிருத்தி அதிகாரசபை என்ற புதிய நிறுவனம் நிறுவப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தெரிவித்தார் |
சுவிற்சர்லாந்தின் மாநில அரசின் தேர்தலில் புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த வரலாற்று வெற்றி
3 அக்., 2022
பொலிகண்டியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு
![]() யாழ்ப்பாணம்- வல்வெட்டிதுறை பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது |
முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை காலமானார்! [Monday 2022-10-03 07:00]
றுப்பினர் பசுபதிப்பிள்ளை காலமானார்! [Monday 2022-10-03 07:00] |
![]() தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை நேற்று காலமானார். மாரடைப்பு காரணமாக உயிரிழந்த இவருக்கு, பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பெளத்த ஆதீக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களையும் முன்னெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. |
ஜெனிவாவில் நெருக்கடி- 6 நாடுகள் மட்டுமே இலங்கைக்காக கைதூக்கும்!
![]() ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டால் போதிய ஆதரவு கிடைக்காது என இலங்கை கருதுகின்றது. ஆறு நாடுகள் மாத்திரமே தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும் என அச்சம் கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன |
ஜெனிவாவில் நெருக்கடி- 6 நாடுகள் மட்டுமே இலங்கைக்காக கைதூக்கும்!
![]() ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டால் போதிய ஆதரவு கிடைக்காது என இலங்கை கருதுகின்றது. ஆறு நாடுகள் மாத்திரமே தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும் என அச்சம் கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. |
15 வயது மாணவி வன்புணர்வு!- யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் கைது.
![]() யாழ்ப்பாணத்தில், காணொளி பதிவை வைத்து மாணவியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயது இளைஞர்களே சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் |
இந்தோனீசிய கால்பந்து போட்டியில் கலவரம்: குறைந்தது 174 பேர் பலி
ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த சூர்யகுமார் யாதவ்- குவியும் பாராட்டுகள்.
ழில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கணவன் மற்றும் மனைவி! உயிரிழப்பிற்கான காரணம் வெளியானது
1 அக்., 2022
4 நகரங்களை ரஷ்யாவோடு இணைத்த புட்டின்: தனது நாடு என்று அறிவித்து மகிழ்ந்தார்
திலீபனின் ஒப்பற்ற தியாகத்தை மலிவு விலையில் விற்பதை அனுமதிக்கப் போகிறோமா?
![]() திலீபன் நினைவு நிகழ்வை அரசியல் செய்ய முனைந்தவர்கள் தொடர்பாக, திலீபன் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் உறுப்பினரான, மாவீரர் அறிவிழியின் தந்தை மனோகரன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். |
உக்ரைன் பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைப்பு - ஐ.நா. பொதுச் செயலாளர் கண்டனம்
30 செப்., 2022
ஒரு நாள் முழுக்க அசைவ உணவுகளை தவிர்க்கவிருக்கும் சுவிஸ்
![]() உலக சைவ தினமாக கொண்டாடப்படும் அக்டோபர் 1-ஆம் திகதி சுவிட்சர்லாந்து ஒரு நாள் முழுக்க சைவ உணவுக்கு மாற உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற மக்களை ஊக்குவிப்பதற்காகவும், பூமியைக் காப்பாற்ற உதவுவதற்காகவும், சுவிட்சர்லாந்து அக்டோபர் 1-ஆம் திகதி Swisstainable சைவ தினத்தன்று, முழுக்க சைவ உணவுகளை மட்டுமே உண்ணவுள்ளது. |
மலேசியாவில் விடுதலைப் புலிகளைத் தடைப்படியலிருந்து நீக்குவது தொடர்பன மேன்முறையீடு தள்ளுபடி
ஆஸ்ரேலியாவில் சைபர் தாக்குதல்: சுமார் 10 மில்லியன் பேரின் தரவுகள் திருடப்பட்டன!!
தமிழீழம் வளலாய் அச்சுவேலி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குலசிங்கம் செல்வகுமார் (செந்தாழன்) அவர்கள் கடந்த 20.08.2022அன்று சுகயீனம் காரணமாக பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் சாவடைந்தார்.
சாவடைந்த செந்தாழன் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக 2001ம் ஆண்டு ஐப்பசி மாதம் தொடக்கம் 2009 மே 18 வரை தாயகத்திலும், புலம் பெயர் தேசத்திலும் விடுதலைப் போராளியாகத் தன்னை அர்ப்பணித்துப் போராடியவர்.
சாவடைந்த செந்தாழன் அவர்கள் தாயகத்தில் மணிவண்ணன் பயிற்சிப் பாசறை, ஜொனி அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி, பட்டய அறிவியற் கல்லூரி, அனைத்துலகத் தொடர்பகம், கேணல் கிட்டு அரசறிவியற் கல்லூரி போன்றபல பகுதிகளில் பயிற்சி பெற்று, 2006ம் ஆண்டு ரஷ்ய மொழி ஆற்றும் அரசறிவியல் படிப்பதற்காக ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். 2009ம் ஆண்டு வரை ரஷ்யாவில் தனது பணியை மேற்கொண்டு வந்தார்.
புலம் பெயர்ந்து பிரான்ஸ் நாட்டிற்கு வந்த செந்தாழன் அவர்கள் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் கடந்த 12 வருடங்களாக வாழ்ந்து. தாய் நாட்டிற்காகவும் கடமை செய்து வந்ததுடன் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகர் வாழ் மக்களுடனும் அன்பைப் பேணி வந்துள்ளார்.
இவரது இறுதி வணக்க நிகழ்வுகள் 24.09.2022 அன்று Crématorium de la Robertsau,15 RUE DE L'ILL ,67000 STRASBOURG ,(ROBERTSAU) அங்கு நடைபெற்றிருந்தது. இறுதி வணக்க நிகழ்வில் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் வாழ் தமிழ் மக்களும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பினர்களும், ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் அமைப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ஈகைச்சுடர் ஏற்றல், அகவணக்கம், மலர்வணக்கத்தைத் தொடர்ந்து பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் உரையாற்றியிருந்தார். அத்துடன் சக போராளிகளும் நினைவுரையை ஆற்றியிருந்தனர்.
செந்தாழன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு ஸ்ராஸ்பூர்க் வாழ் மக்களின் கண்ணீரால் நிறைந்திருந்தது.
இவரது வித்துடல் 26.09.2022 அன்று Cimetiére Nord, 15 RUE DE L'ILL ,67000 STRASBOURG (ROBERTSAU) துயிலும் இல்லத்தில் தேசிய கொடி போர்த்தி விதைக்கப்பட்டது.
தேசிய சபையில் இரண்டு குழுக்களை அமைக்க முடிவு! [Friday 2022-09-30 07:00]
![]() புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய சபையின் அங்குரார்ப்பண கூட்டம் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது |
நினைவேந்தல் வழக்கில் இருந்து நிரோஷ் விடுவிப்பு!
![]() கடந்த ஆண்டு மாவீரர் தினம் நினைவேந்தல் தொடர்பில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கும் முடிவுறுத்தப்பட்டது. |