7 நவ., 2013

மத்திய அமைச்சரவைக் கூட்டம்: காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து இறுதி முடிவு?
இலங்கையில் வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை, காமன்வெல்த் நாடுகள் மாநாடு நடைபெறுகிறது. இந்தியா இம்மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும்
எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களே சிலர் இதனை பிரதமரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது பற்றி வியாழக்கிழமை முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வியாழக்கிழமை நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில்  மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க தி.மு.க., தலைவர் கலைஞர் உள்ளிட்ட பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.