புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 நவ., 2013

பிரித்தானியாவில் தீபாவளி பண்டிகை! தமிழ் முறைப்படி சேலை அணிந்து வந்த பிரதமரின் மனைவி
வட மேற்கு லண்டனிலுள்ள சுவாமி நாராயணன் ஆலயத்தில் திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தனது பாரியார் சமந்தா சகிதம் கலந்து கொண்டார்.
இதன்போது சமந்தா தமிழ் பண்பாட்டின் பிரகாரம் சேலை அணிந்து வந்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
1995ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட மேற்படி ஆலயமானது இந்தியாவுக்கு வெளியிலுள்ள மிகப்பெரிய இந்து ஆலயமாக கருதப்படுகிறது.
எனினும் டேவிட் கமரூன் தனது வழமையான பாணியில் முழுமையான ஆடை அணிந்திருந்தார்.
அவர்கள் இருவரும் பொப்பி மலர்களை அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்து பாரம்பரிய வழக்கத்தின் பிரகாரம் அவர்கள் இருவரும் பாதணிகளை ஆலயத்திற்கு வெளியே கழற்றி வைத்துவிட்டு ஆலயத்திற்குள் பிரவேசித்தனர்.
டேவிட் கமரூனும் சமந்தாவும் (42 வயது)  சுவாமி நாராயணன் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளில் பங்கேற்றனர்.

ad

ad