7 நவ., 2013

யாழில் காதலியோடு உல்லாசமாக இருந்த ஆபாச புகைப்படங்களை முகநூலில் (பேஸ்புக) வெளியிட்ட காதலன் கைது
காதலியோடு உல்லாசமாக இருந்த ஆபாச புகைப்படங்களை முகநூலில் (பேஸ்புக்) வெளியிட்ட காதலனை கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார்.

யாழ்.கொழும்புத்துறைப் பகுதியைச் சேர்ந்த இந்த காதல் சோடி. தற்போது காதல் முறிவடைந்த நிலையில் காதலன், காதலியின் ஆபாச படங்களை முகநூலில் வெளியீடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து காதலனான 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் நாளை வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ்.பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.