இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள முருகன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவர் இன்று காலை முதல் வேலூர் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள முருகன், சாந்தன், மற்றும் பேரறிவாளன் ஆகியோர் வேலூர் சிறைச்சாலையிலும்,
முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நளினியை முருகன் 15 நாட்களுக்கு ஒரு தடவை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தன்னை சந்திக்க வரும் பார்வையாளர்களை சிறைச்சாலை அதிகாரிகள் உரிய முறையில் அனுமதிப்பதில்லையெனவும் தமக்கு உணவுகள் சரிவர பரிமாறப்படுவதில்லையெனவும் நளினி இன்று முருகனிடம் தெரிவித்தார்.
இதனையடுத்தே முருகன் வேலூர் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.