புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 நவ., 2013

கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரின் கடை தீக்கிரை

யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரின் வர்த்தக நிலையம் இனம்தெரியாத நபர்களினால் இன்று அதிகாலை தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.அருணோதய ஆரம்ப பாடசாலைக்கு அருகிலுள்ள அவரது வீட்டுடன் இணைந்த கடையே இவ்வாறு எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது.
 
இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற இந்தச்சம்பவத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து சேதங்களுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்தச்சம்பவம் தொடர்பாக உறுப்பினர் மயூரன் தெரிவிக்கையில்.
உறக்கத்திலிருந்த போது திடீரென வெடிச்சத்தம் கேட்டது அப்போது வெளியில் வந்து பார்த்தோம். எமது வர்த்தக நிலையம் தீபிடித்து எரிந்து கொண்டிருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தோம். இது சம்பந்தமாக தெல்லிப்பளை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ad

ad