புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 நவ., 2013

பொலிஸ் நிலையங்களில் சித்திரவதை; ஆசிய மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டு 
இலங்கையில் உள்ள பொலிஸ் நிலையங்களில்      சித்திரவதைகள் தொடர்வாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


களுத்துறை மாவட்டம் பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் 27 வயதான டி.ஏ. ருவான் குதார என்பவர் என்ற கைதி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவரின் மனைவி சிந்தனி நதீஷா மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் பொலிஸ் நிலையத்தில் அவரை பார்வையிட சென்றிருந்தனர்.

அப்போது பொலிஸ் நிலையத்திற்கு பின்னால் வைத்து சில பொலிஸார் ருவான் குமாரை அடித்து சித்திரவதை செய்து கொண்டிருந்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி அவரது மனைவி தொலைபேசி ஊடாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும் எந்த உதவிகளும் கிடைக்கவில்லை என்பதுடன் அவரது கணவர் தொடர்ந்தும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தடுத்து நிறுத்த அவர் பொதுமக்களிடம் இருந்து உதவியை கோரியுள்ளார்.

பண்டாரகம பொலிஸ் நிலையத்தை சேர்ந்த சில பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குமார முறைப்பாடுகளை செய்திருந்த காரணத்தினால் அவர் இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

ருவான் குமாரைவை சித்திரவதையில் இருந்து பாதுகாக்க உடனடியான தலையீடுகளை மேற்கொள்ளுமாறு ஆசிய மனித உரிமை ஆணைக்குழு, இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணைகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கேட்டுள்ளது.

ad

ad