7 நவ., 2013

 பொதுநலவாய வர்த்தக பேரவை மாநாட்டைப் புறக்கணிக்கிறது பிரித்தானியா 
கொழும்பில் நடக்கவுள்ள பொதுநலவாய  உச்சி மாநாட்டுக்கு பிரித்தானியாவில் இருந்து வர்த்தகப் பிரதிநிதிகள் குழு அனுப்பப்படாது என பிரித்தானிய, நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.


பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில், நேற்று வர்த்தக அமைச்சர் மைக்கல் பலோன், தகவல் வெளியிடுகையில்,

“பிரதமரின் வர்த்தக தூதுவர்களின் தலைவரான மார்லன் பிரபு, பொதுநலவாய வர்த்தக பேரவையின் அழைப்பின் பேரில், சிறிலங்கா செல்கிறார்.

ஆனால், அந்தக் கூட்டத்தில், பிரித்தானிய வர்த்தகப் பிரதிநிதிகள் அந்தக் கூட்டத்தீல் பங்கேற்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய  உச்சி மாநாட்டில் பிரித்தானியா பங்கேற்கக்கூடாது என்று அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.