யாழில் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் கைது
யாழ்.நகரப் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாடசாலை ஒன்றில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவியை, அதே பாடசாலையைச் சேர்ந்த கணித பாட ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியில் மாணவியைத் தொந்தரவு செய்துள்ளார்.
அத்துடன் மாணவியின் தொலைபேசி இலக்கங்களுக்கு இரவு வேளையில் தொலைபேசி அழைப்புக்களை எடுத்து ஆபாச வர்த்தைகளால் பேசுவதாகவும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து, குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் தொடர்ந்து விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மாணவியில் விடயத்தில் பாடசாலை நிர்வாகம் கவனயீனமாக இருந்ததாகவும் இதனால் பொலிஸில் முறையிடப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த மாணவியின் பெற்றோர் யாழ்.நகரில் பிரபல வர்த்தகர் என்பது குறிப்பிடத்தக்கது.