புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 நவ., 2013

பிரபல சிரிப்பு நடிகர் சிட்டிபாபு கவலைக்கிடம்!

பிரபல சிரிப்பு நடிகர் சிட்டிபாபு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சுய நினைவிழந்து கோமாவில் உள்ள அவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி
வருகின்றனர். தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் சிட்டிபாபு. இவர் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இருதய கோளாறு காரணமாக, 'பைபாஸ் சர்ஜரி' செய்து கொண்டார். அதன்பிறகு 2 வருடங்களாக அவர் நடிக்காமல் ஓய்வில் இருந்தார். சமீபகாலமாக அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. நேற்று முன்தினம் அவர் திடீரென மயங்கி விழுந்தார். கவலைக்கிடமான நிலையில், அவரை சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் அவருடைய நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. சுய நினைவை இழந்து, 'கோமா' நிலையில் உள்ளார் சிட்டிபாபு. மூளையில் கட்டி இருப்பதாகவும், அதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.


ad

ad