புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 நவ., 2013

இலங்கை மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தொடர்ந்தும் கனடா போராடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமை மீறல் நிலைமைகளுக்கு எதிராக கனடா தொடர்ந்தும் போராடும் என அந்தநாட்டு வெளிவிவகார அமைச்சின் பாராளுமன்ற விவகாரச்
செயலாளர் தீபக் ஒபராய் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பிலான கனடாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. அதன்படி இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு உறவுகளைத் தொடர முடியாது. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் உச்சபட்ச பங்களிப்பினை வழங்காத ஒரே நாடாக கனடா திகழ்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் வடக்கிற்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட உள்ளதாகவும் விஜயத்தின் பின்னர் இலங்கை நிலைமைகள் குறித்து கனேடிய அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்த உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். -

ad

ad