காமன்வெல்த் மாநாடு: தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து பிரதமர் முடிவு எடுப்பார்: ஜி.கே.வாசன் பேட்டி
தமிழக மக்களின் உணர்வுகளை மனதில் கொண்டு காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் நல்ல முடிவு எடுப்பார் என மத்திய கப்பல்போக்குவரத்துத்துறை
அமைச்சர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. மீனவர்கள் விவகாரம் குறித்து மனதில் கொண்டும், தமிழக மக்களின் உணர்வுகளை மனதில் கொண்டும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் நல்ல முடிவு எடுப்பார். திருப்பூரில் ராஜீவ்காந்தி சிலையை சேதப்படுத்திவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவர்களின் சிலைக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றார்.