இந்த மனுவில், தனது கணவருக்கு திருமணத்தை மீறி ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததாகவும், தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இந்த வழக்கு ஏற்கனவே இருமுறை ஒத்திவைக்கப்பட்டநிலையில், இன்று 3வது முறையாக விசாரணைக்கு வந்தது. இரு தரப்பினரும் தங்களது வழக்கறிஞர்கள் மூலமாக காணொளி வாயிலாக ஆஜராகுவதாக கோரிக்கை விடுத்தனர். ஆனால், இந்த கோரிக்கையை நிராகரித்த செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுஜாதா வழக்கை ஆகஸ்ட் 7 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார். மேலும், வக்காலத்து தாக்கல் செய்யப்படாதது குறித்து சங்கீதா தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி சுஜாதா, மனுதாரர், எதிர் மனுதாரரின் மின்னஞ்சல் முகவரிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். |